செவ்வாய், 12 அக்டோபர், 2010

பொண்ணு பாக்க போறேன் - ஒரு பக்க கதை - 3


வணக்கம், வாங்க வாங்க, என்றழைத்த அந்த நபர் தான் பெண்ணின் அப்பாவாக இருக்க கூடும் என்பதை  எத்தனையோ இடங்களில் பெண் பார்த்த அனுபவம் சொல்லிற்று.    என் அப்பாவும் அம்மாவும் தங்களின் இறுகிய முகத்தை சற்று தளர்த்தி சிறிய புன்னகையை பதில் வணக்கமாய் தெரிவித்தனர்.  படலம் ஆரம்பமாயிற்று, பெண் வீட்டார் தங்களின் குடும்ப பெருமைகளை அள்ளி வீசினர். வழக்கம்போல் என் அப்பாவும் அம்மாவும் தலையை ஆட்டி அதையெல்லாம் கேட்டு வைத்தனர்.  பெண்ணின் அப்பா நேரிடையாக என்னிடம் கேட்டே விட்டார், சொல்லுங்க தம்பி, தரகர் சொன்னார், உங்க கண்டிஷன் என்ன? என்னால முடிஞ்சத செய்யுறேன்.  நான் என் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தேன், அவர்களின் முகம் எந்த விதமான பாவங்களையும் காட்டாமல் இறுகி இருந்தது.  நான் நிதானமாய் ஆரம்பித்தேன், சார், நான் கல்யாணம் பண்ணிக்கிற  பொண்ணு வேலைக்கு போகணும், அது மட்டுமில்லாமே அவள பெத்தவங்களும் அவளோடவே வந்துடனும், எல்லோரும் கூட்டு குடும்பமா இருக்கணும், இது தான் என் கண்டிஷன்.        பெண் வீட்டாரின் முகத்தில் ஏகப்பட்ட குழப்பம், ஒரு சிலர் என்னை பற்றி காரமாகவோ அல்லது கிண்டலாகவோ பேசினார். பிறகு  அவர்களுக்குள் விவாதித்து விட்டு, சரிங்க நாங்க இத பத்தி பேசி  ஒரு முடிவு எடுதாப்பரம் உங்களுக்கு போன் பண்றோம் என்றார் பெண்ணின் உறவினர் ஒருவர்.  என் அம்மாவும் அப்பாவும் எழுந்துகொண்டனர் அதே இறுகிய முகத்தோடு.   

வெள்ளி, 23 ஜூலை, 2010

யார் தெய்வம் - ஒரு பக்க கதை-2


குமரன் காலையிலேயே குளித்துவிட்டு நெற்றியில் பெரியதாக பட்டை இழுத்துவிட்டு கடவுளை கும்பிட பூஜை அறையில் நின்றிருந்தான். கண்களை மூடி, மூச்சை நன்றாக  உள்ளிழுத்து, சீராய் வெளியே விட்டான். உதடுகள் முணுமுணுக்க தொடங்கின.  கடவுளே, நான் என்ன வேண்டினாலும் தரும் உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, நீங்கள் தான் எனக்கு புடிச்ச தெய்வம், நான் எப்ப எது கேட்டாலும் எனக்கு எப்படியாவது கிடைக்க வைக்கீரங்க, அதுக்கு ரொம்ப நன்றி, நான் சைக்கிள் வாங்கனும்னு வேண்டினேன், சைக்கிள் தந்தீங்க, +2 பாஸ் பண்ணதும் இன்ஜினியரிங் சேரணும்னு வேண்டினேன், உடனே எனக்கு இன்ஜினியரிங் சீட் கெடச்சுது, இப்படி கேட்டதெல்லாம் கொடுக்குற கடவுளே இப்பவும் நான் உங்களை ஒண்ணு வேண்டிக்கிறேன், அதையும் தயவு செய்து எனக்கு கொடுங்க என்றவாறு  கண்களை திறந்து கடவுளின் உருவத்தை உற்று நோக்கினான் குமரன். "கடவுளே, என் காலேஜ் நண்பன் சாகுல் அமீது புது பைக் வாங்கி இருக்கான், ரொம்ப நல்லா இருக்கு, எனக்கும் அது போல ஒரு பைக் வேணும், தயவு செஞ்சு பைக் கிடைக்குற மாதிரி பண்ணுங்க"  என்றவாறு கைகளை உயர்த்தி தலை வணங்கி கடவுளை குபிட்டு விட்டு வெளியே  வந்தான் குமரன். அங்கு அவன் அப்பா அவனை ஒரு குறும் புன்னைகையுடன் பார்த்தார். "குமரா இங்க வா, இத புடி" என்றவாறு ஒரு சாவியை கொடுத்தார் குமரனின் அப்பா. "ரொம்ப நாளா பைக் வேணும்னு பொலம்பிகிட்டு இருந்தியே, போய் வாசல்ல பாரு, ஒரு புது பைக் வாசல்ல நிக்குது, ஆபீஸ்ல லோன் போட்டு வாங்கி இருக்கேன்,  இந்தா பணம் போய் ஒரு நல்ல ஹெல்மெட் வாங்கிக்க, வண்டியை எப்பவும் கவனமா ஓட்டனும், என்ன புரிஞ்சுதா" என்றவரின் முகத்தை பார்கிறேன். 
யார் ..........?

செவ்வாய், 22 ஜூன், 2010

கடவுள் என் முன்னே நிற்கிறார்

விரித்த விழி மூடவில்லை,
உள்ளிழுத்த ஆவி வெளிவரவில்லை,
மயிர் கால்கள் குத்திட்டு நிற்க,
'சிலையாய்' நின்றேன்
கடவுள் என் முன்னே நிற்கிறார்.


                        ********


தினமும் வேண்டுவேன் கடவுளை,
கடவுளே இதை கொடு, அதை கொடு,
உடனே கொடு, சீக்கிரம் கொடு,
இத்தனை நாட்களுக்குள் கொடு,
இத்தனை மாதங்களுக்குள் கொடு,
கொடு, கொடு, கொடு.
கடவுள் 'கேட்டார்'
சரி கேட்டதையெல்லாம் தருகிறேன்
அத்துடன் நீ திருப்தி கொள்வாயா?

புதன், 16 ஜூன், 2010

பட்டாசு பத்திக்கிச்சு: நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?

பட்டாசு பத்திக்கிச்சு: நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?

நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?

நண்பர்களே உங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்,
மேலே உங்களின் ஓட்டுகளை இட்டும், கமெண்ட் வழியாகவும் உங்களின் அனுபவங்களை இந்த வலை தலத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?

நம்பலாம் - இனிய அனுபவம்
நம்பகூடாது - கசப்பான அனுபவம்
ஒரு எல்லைவரை நம்பலாம்
நண்பர்களா, எங்கே அவர்கள்?

சனி, 12 ஜூன், 2010

ஒரு பக்க கதைகள் - 1 - "அம்மா நான் பாசாயிட்டேன்"

ஒரு பக்க கதைகள் - 1


"அம்மா நான் பாசாயிட்டேன்"

குமாருக்கு இதய துடிப்பு அதிகரித்துகொண்டே இருந்தது. அவனுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிவருகின்றன.

இது அவனுடைய வாழ்கையின் போக்கையே மாற்றப்போகும் தினம் என்பது தெளிவாக உணர்ந்திருந்தன். அவனுடன் படித்த நண்பர்கள் வசதியில் உயர்ந்தவர்களாகவும், இன்று தோற்றால் மறுபடி பரீட்சை எழுதி வெற்றி பெற பண பலமும், சுற்றத்தார் உதவியும் நிறைந்தவர்கள். குமாருக்கு அப்படி இல்லை. அவன் வீட்டுக்கு ஒரே பையன், அவன் அப்பாவும் அம்மாவும் அந்த சிறிய கிராமத்தில் விவசாய கூலிகளாக வேலை செய்கிறார்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் மகனை படிக்க வைக்க முயற்சித்து பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். அதுவும் பள்ளி கட்டணம், புத்தகம் எல்லாம் இலவசமாக கிடைப்பதால் ஏதும் பிரச்சினை இல்லாமல் இருந்தது.

ஆனால் விதி ஊரை ஒட்டிய நெடுஞ்சாலையில் புதியதாக திறந்திருக்கும் பெட்ரோல் பங்கினால் வந்தது. அந்த பங்கின் முதலாளி குமார் அப்பா வேலை செய்யும் பண்ணையாருடையது. அவர் உரிமையோடு குமாரின் அப்பாவை கூப்பிட்டு "என்னப்பா உன் பையன் பத்தாவது பரீட்சை எழுதி இருக்கானாமே, எப்படி, தேறுவானா மாட்டானா, எப்படி இருந்தாலும் பரவாயில்லை உன் பையனை என்னோட பெட்ரோல் பங்குல கேசியர் வேலைக்கு போடறேன், உடனே அவன வேலையில போய் சேர சொல்லு" என்றார். குமாரின் அப்பாவுக்கோ அவரின் கட்டளையை மீற முடியாத தர்மசங்கடமான நிலை. குமாரின் அம்மாவிடம் இதை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது குமார் வீட்டினுள் நுழைந்தான். "இங்க பாருங்க, அவன படிக்க வைக்க நாம இது வர ஒன்னும் பெரிய செலவு ஒன்னும் பண்ணதில்ல, அவன் படிக்கணும் என்று ஆசை  படறான், அவன் படிச்சு முன்னேறினா நமக்கு தானுங்க பெரும, அதனால அவன் தொடர்ந்து படிக்கட்டும்" என்றார். குமாரின் அப்பாவும் இதற்க்கு ஒத்து கொண்டார் ஒரு நிபந்தனையோடு, பாஸாயிட்டா  தொடர்ந்து படிக்கலாம், ஆனா பெயிலாயிட்டா பெட்ரோல் பங்க் வேலைக்கு போகணும் என்று.   நண்பன் பேப்பரை கொடுத்து பரீட்சை நம்பரை பார்க்க சொன்னான். "அம்மா நான் பாசாயிட்டேன்" "அம்மா நான் பாசாயிட்டேன்"
டேய் குமார், குமார் என்னடா பகல் கனவு, கஸ்டமர் வந்து இருக்காங்க பாரு, போய் பில்லு போடற வழியை பாரு என்றபடி கல்லாவில் உட்கார்ந்தார் பண்ணையார்.






 

வியாழன், 10 ஜூன், 2010

பிரார்த்தனையால் வேண்டியதெல்லாம் கிடைத்திடும்

பிரார்த்தனை



பிரார்த்தனையால்
வேண்டியதெல்லாம் கிடைத்திடும்
இறைவனை தொழுதால்,
வேறென்ன வேண்டும் உனக்கு.


நான் இந்த மதம்,
அந்த மதத்து கடவுள், கடவுள் கிடையாது என்றால் எப்படி.
எனக்கு என் தாயை தெரியும்,
உனக்கு உன் தாயை தெரியும், ஆனால்
என் தாய் மட்டும் தான் உயரந்தவள் என்றால் எப்படி 
எல்லா தாயும் தன் தாய் போல் ஆகுமா.
ஆனால் தாயுள்ளம் தாயுள்ளம் தான்,
வேறொரு குழந்தை அழுதாலும்
அவள் உள்ளம் உருகிடும்.

வாழ்க்கையில் உனக்கு என்ன வேண்டும் என பட்டியலிடு,
அதை கடவுள் முன் வை நீ கேட்டதெல்லாம் கிடைத்திடும்.
இது என்ன வியாபாரமா வேண்டியதை கடவுள் நமக்கு தர.
இது ஒரு பந்தம்,
பக்தனுக்கும் கடவுளுக்கும்.


நீ எப்படி சூன்யத்திலிருந்து உருவாகி மீண்டும்
சூன்யமாய் மறைவதை நம்புவாய் அல்லவா.
அப்படித்தானே இதையும் நம்பவேண்டும்.


வாழ்க்கை சிறியது, நம்பிக்கை பெரியது.
நம்பிக்கையில் தான் உலகம் சுழல்கிறது.
வாழ்ந்து தான் பார்ப்போம் நம்பிக்கையான பிரார்த்தனையுடன்.





புதன், 9 ஜூன், 2010

குட்டி பூனையும், டிரைவர் ஹீரோவும்


காலை எட்டு மணி, பஸ்சுக்காக காத்திருக்கிறேன். அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டது. சாலையில் வாகனங்கள் கற்றை கிழித்தபடியும், நேரத்தை விரட்டியபடியும் இரண்டுபக்கமும் சென்றுகொண்டிருந்தது. வித விதமான கார்கள், வாகனங்கள், வித விதமான மனிதர்கள் நேரத்துக்கு கட்டுப்பட்ட இயந்திரங்களாய் நேற்று பாதியில் விட்டு வந்த வேலையை தொடர சென்றுகொண்டிருக்கிறார்கள். கதிரவன் தனது சூடான கரங்களால் சுரீர் என்று அறைந்துகொண்டிருந்தான். வெயில் மேலேற தொடங்கிய நேரம். வியர்வை பிசுபிசுப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. என்ன தான் பாடி ஸ்ப்ரே போட்டாலும் அலுவலகம் செல்வதற்குள் நாறிவிடுகிறது, எல்லாம் வெயில் பகவானின் கைங்கர்யம். திடீரென்று வேகமான போக்குவரத்தில் மாற்றம் உண்டானது. 'கிரிச்' 'கிரிச்' என பிரேக் போடுவதும் பின் மெதுவாக நகர்ந்து செல்வதாய்  இருந்தன வாகனகள்.  ஏன் என்ன ஆயிற்று, இங்கு வேக தடை கூட இல்லையே, இந்த சாலையை எப்போதும் சிறப்பாகவே பராமரித்து வருவார்கள், சாலை பழுது என்றுகூட சொல்லமுடியாது. மெல்ல அனைவரின் கவனமும் சாலை மீது விழுந்தது. அதோ, அதோ அங்கே என்ன? இது பூனை குட்டி போலல்லவா  இருக்கிறது. அதிசயமாய் உணர்தேன். இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறைந்த இவ்வளவு வேகமான சாலையின் நடுவில் எப்படி இந்த குட்டி பூனை சென்றிருக்க முடியும். யார் கொண்டுவிட்டிருக்க முடியும். புரியாத புதிராய் இருந்தது. கார்கள் நின்றதும் அந்த குட்டி பூனை சாலையை கடக்க  அதன் வழக்கமான குணத்தால் பதுக்கி பதுங்கி செல்ல முயன்றது, எங்கே பதுங்க முடியும், இருப்பதோ வாகனங்களின்   சக்கரம் மாத்திரமே. வாணலிக்கு பயந்து அடுப்பில் குதித்த கதையாய்  சக்கரங்களின் அடியில்  பதுங்கிய அந்த பூனை குட்டியை  பார்க்க பார்க்க மனம் பதறியது. எப்படியாவது அந்த பூனை குட்டியை காப்பாற்றும் எண்ணத்தோடு  வாகனங்களை கடந்து சாலையின் மைய பகுதிக்கு வந்தடந்தேன். டிரைவரிடம் வாகனத்தை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, காரின் அடியில் குனிந்து  மெல்ல கைகளால் தூக்கினேன். அய்யோ, இத்தனை சிறிய பூனை குட்டிக்கு இவ்வளவு கோபமா,  வாயை  அகலமாக திறந்து அதன் கூர்மையான குட்டி பற்களை வெளியில் காட்டியும், கால்களில் புதைந்து கிடந்த நக கத்திகளை  வெளியில் காண்பித்தும்  கோபமாக சீறியது அந்த குட்டி பூனை. சட்டென்று தூக்கி சாலையின் நடுவில் உள்ள மைய தடுப்பு பாதையில் போட்டேன். அப்பாடா, குட்டி பூனையை காப்பற்றியதில் என்  மனம் லேசாகி சந்தோஷ சாரல் தொற்றிகொண்டது.
அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அந்த குட்டி பூனை திடீரென மீண்டும் சாலையை நோக்கி பாய்ந்தது, நானும்  சூழ்நிலை மறந்து அதை காப்பாற்ற அதன் பின் ஓடினேன், சிறக், கிரிச், என்ற சத்தங்கள், சாலையில் வாகனகள் திடீர் பிரேக் இட்டதால் வந்தவை. நல்லவேளை  பூனை தப்பியது, நானும்தான். திட்ட நினைத்த டிரைவர் பூனைக்குட்டியை கண்டதும், வாயை திறக்கவில்லை. மீண்டும் முயற்சித்தேன், வாகனங்களுக்கு  அடியில் ஒளிந்துகொண்ட அந்த பூனை குட்டியை தேடினேன், அது என் கண்களுக்கு புலப்படவில்லை.  உடையெல்லாம் வியர்வையால் நனைந்தது. இனி சாலையின் குறுக்கில் நின்றுகொண்டிருந்தால் சரியாக இருக்காது என்று தோன்றியது. சாலையை கடந்து மீண்டும் பஸ் நிறுத்ததிற்கு வந்தேன். அடடா என் பஸ் பறப்பட்டு சென்று கொண்டிருந்தது. போச்சு. இனிமே 20 நிமிடம் கழித்துதான் அடுத்த பேருந்து. இந்த வெயிலில் இன்னும் 20 நிமிடம் கழித்து தான் அடுத்த பஸ். வெயிலின் வீரியம் அதிகரித்துகொண்டிருந்தது. 

குட்டி பூனையின் நிலைமை என்னவாயிற்று, மனதில் சிறு வலியுடன்  பார்த்தேன்.  நிறுத்தி, நிறுத்தி சென்றுகொண்டிருந்த டிரைவர்களில் ஒரு நபர் மட்டும் சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு அந்த பூனையை கையில் எடுக்க முயற்சித்தார், முன்போலவே அந்த பூனை சீறிற்று, ஆனால் சற்றும் பயப்படாமல் இரு கைகளாலும் பூனையை திமிரவிடாமல் இறுக்கி பிடித்து தன் வாகனத்தின் பின்புறம் போட்டார். பின்னர் வாகனத்தை மேற்கொண்டு செலுத்த ஆரம்பித்தார் யாரையும் சட்டை செய்யாமல்.
ஒரு உயிரை  காப்பாற்றிய அவர் இப்போது என் கண்களுக்கு பெரிய ஹீரோவாக தெரிந்தார். இப்போது நான் என்னை நினைத்துகொண்டேன், பூனை குட்டியை காப்பாற்ற யாரும் துணியாதபோது நான் மட்டும் முயற்சிதேனே, ஆனால் அந்த பூனை குட்டியின் சீற்றத்தால் மீண்டும் காப்பாற்ற முனையாமல் பயந்து திரும்பிவிட்டேனே. கடைசியில் அந்த பூனை குட்டியையும் நான் காப்பாற்றவில்லை, நேரத்திற்கு அலுவலகமும் போகவில்லை.
உதவி செய்வதற்கு ஈரமனம் மட்டும் போதாது, தைரியமும் வேண்டுமோ.
அந்த டிரைவர் ஹீரோ தானே. 

செவ்வாய், 8 ஜூன், 2010

தங்களின் தன்னம்பிக்கை முன்பை விட இப்பொழுது அதிகரித்திருகிறதா?- ஓட்டெடுப்பில் முடிவுகள்

தங்களின் தன்னம்பிக்கை தற்போது உயர்ந்து இருக்கிறதா?  என்கிற ஓட்டெடுப்பில் கீழ் கண்ட முடிவகள் அறிவிக்கபடுகிறது.

முடிவுகள்
மொத்தம் வாக்களித்தவர்கள் 15.
தங்களின் தன்னம்பிக்கை முன்பை விட இப்பொழுது அதிகரித்திருகிறதா?
ஆம் 10 (66%)
இல்லை 2 (13%)
மிக குறைவாக 0 (0%)
மிக அதிகமாக 3 (20%)
பெரும்பான்மையாக தன்னம்பிக்கை உயர்ந்துள்ளதாக வாக்களிக்கபட்டுள்ளது.
2 வாசக அன்பர்கள் இல்லை என வாக்களித்துள்ளனர். அவர்களின் தன்னம்பிக்கை உயரவும், இவ்வாறு வாக்களிக்க காரணமான அவர்களின் மனதில் உள்ள காயம் அல்லது தாழ்மை உணர்ச்சி மாறி அவர்களும் அடுத்த முறை தன்னம்பிக்கையோடு வாக்களிக்க இறைவனிடம் அவர்களுக்காக வேண்டுவோம்.

ஓட்டெடுப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

ஞாயிறு, 6 ஜூன், 2010

கண்'நீர்' ரத்தம்

கண்'நீர்' ரத்தம்

உதட்டிலே முகமுடி சிரிப்பு
கண்களிலே பூட்டிய நெருப்பு
இது சமூகம் தனை எதிர்கொள்ள.

உள்ளத்திலே காயம் பட்டது
அது உனக்கு தெரிய நியாயம் இல்லை.
உனக்கு கண்களும் இல்லை, இதயமும் இல்லை. 

ரத்தம் வழிந்ததே என் கண்களில்,
அதை வெறும் கண்'நீர்' என்று நினைத்தாயோ.

வார்த்தை அம்பு எய்ததால் வந்த காயம் மாறும்
மீண்டு எழுவேன்  
பீனிக்ஸ் பறவை போல்.


******

சனி, 5 ஜூன், 2010

ஆங்கில எழுத்துல ஒரு எழுத்த காணோமாம்

ஆங்கில எழுத்துகள் 25 -ஆ அல்லது 26-ஆ.

சின்ன கொழந்தைய கேட்டாலும் சொல்லிடும் 26 என்று. ஆனா இப்ப 25 தான்
 
இந்த உலகத்துல எது நடக்கும்! எது நடக்காது! என்று எவராலுமே கணிக்க முடியாது.
அதுக்கு உதாரணம் இதுவும் ஒண்ணு. ஆரம்பத்துல கேள்விப்படும்போது என்னால் சிறிதும் நம்ப முடியவில்லை.
ஏன் உங்களாலும் நம்பமுடியாது?
நாம சின்ன வயசிலேருந்து அ-ன ஆவன்ன படிச்சுட்டு உபயோக படித்திகிட்டும் வரோம். திடிருன்னு அதுல ஒரு எழுத்த இனிமே எடுத்துட போறம், இனிமே அந்த எழுத்தை உபயோக படுத்தாம அதுக்கு பதிலா அதே சத்தம் வர்ற வேறொரு எழுத்த உபயோக படுத்திக்கங்க அப்படின்னு ஒரு பொது அறிவிப்பு வந்தா எப்படி நம்ப முடியும்.
ஆனா அறிவிப்பு வந்தது இங்கிருந்து இல்லே, இங்கிலீஷ் பேசும் நாட்டிலிருந்து. (அப்பாடா தப்பிச்சோம்)
என்ன தெரியுமா, இனிமே ஆங்கில எழுத்துகளில் கடைசியில் இருக்கும் "Z" ஐ உபயோக படுத்த வேணாம், அதுக்கு பதிலா இப்படி பயன்படுத்துங்கன்னு சொல்லி இருக்காங்க, என்ன சொல்லி இருக்காங்கனு கீழ இங்கிலிஷ்ல படிச்சுக்கங்க
Surprising as it sounds, it looks like the English alphabet will be losing one of its letters on June 1st. The announcement came from the English Language Central Commission (ELCC).
Here is a quote from the press release:
After carefully considering and debating the matter for over two years, the ELCC came to the conclusion that the letter “Z” should be removed from the English alphabet. The main objective of this change is to simplify the phonetic aspect of the language, and to unify the American and British spellings.
What will happen to the words that have the letter “z” in them? It depends on the word. According to the ELCC, words that started with a “z” will now start with an “x”. Examples include:
· zero becomes xero
· zoo becomes xoo
· zone becomes xone
· zodiac becomes xodiac
Words that featured a “z” with the “s” sound, on the other hand, will now be officially written with the “s” (i.e., unifying the American and British spelling). Examples include:
· visualize becomes visualise
· analyze becomes analyse
· materialize becomes materialise

Source: http://www.dailywritingtips.com/the-letter-z-will-be-removed-from-the-english-alphabet


என்னத்த சொல்ல, போக போக ஏன் எழுத்தெல்லாம், இனி எல்லாரும் கை, கண் சைகைலேயே பேசிக்கங்கனு சொல்லிடுவங்களோ?


ஆனா உண்மையிலேயே இது ஏப்ரல் ஃபூல் தானாம்


நம்பளையே குறி வெச்சி கொலை வெறியோட தாக்குராங்கப்பா,

யார நம்பரதுனே தெரியல்ல.
 
உண்மை தெரிஞ்சவங்க   யாராச்சும்   சொல்லுங்கப்பா.
 

புதன், 2 ஜூன், 2010

பணவீக்கம் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா நண்பர்களே?

பணவீக்கம் (money inflation)

இந்திய பொருளாதாரம்

இந்திய பணவீக்கம் மார்ச் 2010 முடிவில் 14.86 சதமாக உயர்ந்திருக்கிறது, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமே அதற்கு காரணம் என்றெல்லாம் படித்திருப்பீர்கள் அல்லது கேள்வியாவது பட்டிருப்பீர்கள்.

பணவீக்கம், பணவீக்கம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா நண்பர்களே, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பணவீக்கத்தை கணக்கிட இரண்டு முறைகள் பின்பற்றபடுகின்றன,

1 . மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் ( Wholesale Price Index Inflation - சுருக்கமா WPI)
2 . நுகர்வோர் விலை பட்டியல் பணவீக்கம் (Consumer Price Index Inflation - சுருக்கமா CPI)

நமது இந்தியாவில் மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் (WPI) முறையை உபயோகபடுத்துகின்றனர்.

வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலை பட்டியல் பணவீக்கம் (CPI) முறையை பயன்படுத்துகின்றனர்.

WPI முறை 1902 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இம்முறையே பல பொருளாதார வல்லுனர்கள் மற்றும் துறை வல்லுனர்களின் முயற்சியால் 1970 ஆம் ஆண்டு மேலைநாடுகளில் மாற்றப்பட்டு அங்கு உபயோகத்தில் உள்ளது.

WPI முறையில் பொருட்கள் / சரக்குகள் மொத்த விலை சந்தையில் விற்கப்படும்போது ஏற்படும் ஏற்ற-இறக்க விலை மாற்றத்தால் பணவீக்கம் நிர்ணயக்கபடுகிறது.
இந்தியாவில் மொத்தம் 435 பொருட்கள் WPI முறைக்கு கணக்கில் எடுத்துகொள்ளபடுகிறது.

வாரந்தோறும் வெளியிடப்படும் பணவீக்க விகிதம் இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்பைடயில் தான் என்று தெரியுமா!


இனி பணவீக்கம் எப்படி கணகிடுகின்றனர் என்று பார்ப்போமா?

உதாரணத்துக்கு,

2001 இல் சர்கரையின் விலை ருபாய் 40 ,

2010 இல் சர்கரையின் விலை ருபாய் 60 என கொள்வோம்.


2010 இல் மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் ( Wholesale Price Index Inflation - WPI) எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள பின்வரும் கணக்கினை இடுவோம்


( சர்க்கரை விலை 2010 இல் - சர்க்கரை விலை 2001 இல்) / சர்க்கரை விலை 2001 இல் x 100 ),

அதாவது


( Rs.60 - Rs.40) / Rs.40 x 100 = 50 % ஆகா உயர்ந்திருக்கிறது (உதாரணதிற்கு விலை கொடுத்துள்ளேன், சந்தை நிலவரம் அறிக).


இதை போலவே மற்ற 434 பொருட்களுக்கும் கணக்கிடப்பட்டு மொத்த சதவிகிதமும் வகுக்கப்பட்டு அரசால் வெளியிடப்படுகிறது.

தங்களின் தன்னம்பிக்கை தற்போது உயர்ந்து இருக்கிறதா?

தங்களின் தன்னம்பிக்கை தற்போது உயர்ந்து  இருக்கிறதா?
மேலே சர்வேயில் தன்னம்பிக்கையுடன்,  சிந்தித்து வாக்களியுங்கள்.

புதன், 26 மே, 2010

கை 'கொடுக்குக்' கை



பழைய கதை

பகலும் இரவும் கலக்கும் அந்தி மாலை நேரம்

குருவின் நிழல்  பின்புரமாய் சரிய, 
தள்ளிவிட்ட மகிழ்ச்சியில் வீழும் சூரியன்!

மாலை தென்றலும் ஆற்றங்கரை குளிரும்

நிழல் அது கால் தட்டாமல்
அறிவு பசியுடன் சிஷ்யன் பின் தொடர,

குருவின் சிந்தனை கலைந்தது.
பார்வை கூர்மை கொண்டது, மனமோ ஈரம் நிறைந்தது.

ஆற்றினிலே ஒரு தேள் தத்தளித்தது,
உயிர் தக்க கொந்தளித்தது.

கைகொண்டு தூக்கினார் வெடுக்கென்று கொட்டிற்று,
அது அதன் குணம்,

மீண்டும் மீண்டும் முயற்சி,

இது மனித மனம்.

முயற்சி தான் மெய் வருத்த கூலி தந்தது,
அச்சிறு உயிரும் கரை நடந்தது

புரியா சிறுவன் பணிந்தான் குருவினை,

குரு இதழ் விரிந்தார்
அதன் குணம் மாறா
இது என் குணம்,

இதுவே!
கடவுள் மனிதனை ஆறறிவுடன் படைத்ததின் சாட்சி.

புதிய கதை

வசந்தகள் ஓடின, பழையது கழிந்தது
புதியன பிறந்தன, சிஷ்யன் குருவானான்

அதே ஆற்றங்கரை, உடன் புதிய சிஷ்யர்கள்,
வேறொரு தேள் வழக்கம்போல் தத்தளித்தபடி தண்ணீரில்,

குருவும் முன்றார் கைகொண்டு காப்பாற்றிட
கொடு நஞ்சு தேளும் கொட்டிற்று முனையும் போதெல்லாம்

கடைசியில் மனம் தளரா குரு
முழு முயற்சியின் பலனாய் கரை சேர்த்தார் வலியோடு,

புதிய சிஷ்யர்கள் பணிந்து புரிய முற்படு முன்
முந்திகொண்டது அந்த விஷ தேள்,

வார்த்தைகளில் விஷமும், பேச்சாலும் கொட்டியது,
"தெளிவாய் தான் உள்ளீரா".
("இன்னும் அறிவு வரலியா")

சனி, 22 மே, 2010

இந்திய விமான விபத்து / அஞ்சலி

தங்களது குடும்ப உறுப்பினர்களுக்காக துபாயில் பொருள் ஈட்டி
குடும்பத்தை காக்க நினைத்து வருட முடிவில், விடுமுறையில்,
அந்த குடும்ப உறுப்பினர்களை காண, ஆவலுடன் இன்று
அதிகாலையில் உறக்கத்தை மறந்த விழிகளுடன் காத்திருந்து
கொடிய கடைசி நிமிட ஏக்கங்களுடன்  உயிர்  நீத்த  என் அன்பு இந்திய நண்பர்களே உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன், உங்களின் குடும்பத்தாரின்  துயரில் பங்கெடுக்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவா, உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு நிம்மதியை கொடு.
அவர் தம் குடும்பத்தாரை உடன் நின்று காப்பாற்று.

திங்கள், 17 மே, 2010

வார்த்தை வரம்

வார்த்தை வரம்

இது வார்த்தைகள் இல்லா புதிய உலகம்
வார்த்தை வரம் வாங்கினேன், இறைவனிடம்.
அறிமுக முயற்சியாய் கடவுள் பணித்தார்,
மூன்று வார்த்தைகள் தோன்றும்
கவனமாய் உபயோகி
அதன் பின் உன்னை கண்டேன்
என் உதடுகள் தானாக முணுமுணுத்தது
(1) அடடா (2) என்ன (3) அழகு
புதிய வார்த்தைகள் இல்லை என்னிடம்
என் காதலை சொல்ல.

கதை : "அந்த இரண்டு நிமிடம்"

"அந்த இரண்டு நிமிடம்"  கதை



                                   சார், சார், கொஞ்சம் எழுந்திருங்க நான் இறங்கனும் என்று அந்த இளைஞன்   எழுப்பியதும் "நான்" எழுந்தேன். அட நல்லா  தூங்கிட்டேன் போல இருக்கு என்று சொல்லியபடி எழுந்து அவன் இறங்க வழி விட்டு நின்றேன். அந்த இளைஞன்  நான் பஸ்ஸில் ஏறும் முன்னே அந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன், நான் உட்காரும் போது சிறிதளவு நகர்ந்து நான் உட்காரும் அளவிற்கு இடம் கொடுப்பன் என நினைத்து ஏமாந்து போனேன். அவன் என்னை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இந்த காலத்து பசங்களே இப்படித்தான் பெரியவங்களுக்கு மரியாதையே கொடுக்க தெரியாது, அன்பு என்றால் காதல் மட்டும்தான்னு நினைக்கிறாங்க. இந்த இளைஞர்கள்  தான் இப்படி என்றால், அதோ நிக்கிறாரே அந்த மனிதர், என் வயது தான் இருக்கும், இந்த இருக்கை காலி ஆகும்போது மூன்று இருக்கை தள்ளி நின்றவர் என்னை தாண்டி இருக்கையை பிடிக்க முயன்றவர் நான் சட்டென உட்கார்ந்ததும் ஏமாந்ததாக உணர்ந்து என்னை மனதிற்குள் திட்டியபடி நகர்ந்து சென்றவர் தானே. தனக்கு ஒரு சட்டம், மத்தவங்களுக்கு ஒரு சட்டம். கேட்டா இருக்கையை தந்திருப்பேனே, அவரின் சுயநலத்துக்கு நான் ஏன் அடிபநியனும். நான் கண்டிப்பா பாதுகாப்பா உட்காரனும், என் கையில் உள்ள பையில் ரொக்கமாக சில லட்சங்கள் உள்ளது, என் நண்பனின் மகளுக்கு கல்யாணமாம், என்னிடம் கேட்டான், என் மகளின் கல்யாணத்திற்காக உபரியாக சேர்த்த பணத்தை கொடுப்பதென்று முடிவு செய்து மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டு நண்பனை திடீர் சந்தோஷத்திற்கு உள்ளாக்க செல்கிறேன்.

சார், சார், எழுந்திருங்க ........

எனக்கு எரிச்சலாக இருந்தது, என்ன ஆச்சு இந்த பையனுக்கு, யார் கிட்ட பேசறான், நான் தான் இருக்கையிலேருந்து எழுந்து நின்று வழி விடுகிறேனே, ஆனால் மறுபடியும், மறுபடியும் சொன்னதையே சொல்கிறானே என்று நினைத்தபடி அவனை பார்த்தேன்.

அட! யார் இது இங்கு உட்கார்ந்து இருப்பது, என்னை போலவே இருக்கிறாரே, அட "அது" நான்தான். இது எப்படி சாத்தியம், "நான்" இங்கு நிற்கும்போதே அங்கு எப்படி உட்கார்ந்து இருக்க முடியும், யோசிக்க, யோசிக்க உண்மை சுட ஆரம்பித்தது. பஸ்ஸில் உள்ள ஜனங்களும் என் இருக்கை அருகே "என்னை" தள்ளியபடி குழும்பினர்.

என்னாச்சுப்பா? நம்மோட 'உசுர' எடுக்கரதுக்கே வராங்க! வழி விடுங்கப்பா காத்து வரட்டும், என்ன ஆச்சுன்னு பாருப்பா, உயிர் இருக்கா, ஆம்புலன்ச கூப்டுப்பா இப்ப தான் போன் பண்ணி வைக்குரதுகுள்ளே வந்துடுதே, என வித விதமான வார்த்தைகள், சத்தங்கள் கேட்டது. அவர்களின் குரலில் ஒரு அவசரமும், எரிச்சலும் சேர்ந்து கலவையாய் ஒலித்தது.

        என் பெயர் சுந்தரேசன், வயசு 54 முடிந்து இரண்டு மாதம் ஆகிறது. மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. மூத்த மகளுக்கு கல்யாணம் ஆகி தாத்தா என்று கூப்பிட ஒரு பெண் குழந்தையும் பெற்று சென்ற மாதம் தான் என் வீட்டிலிருந்து அவளின் மாமியார் வீட்டுக்கு போனாள். மகனோ இன்ஜினியரிங் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிறான். மனைவி, நான் என்ன சொன்னாலும் புன்சிரிப்புடன் தலையாட்டிவிட்டு, அதில் ஏதேனும் தவறு இருந்தால் நல்ல மூடில் இருக்கும் போது என் மனம் நோகாமல் எடுத்து சொல்வாள். நண்பார்கள் எப்போதும் போல இன்றும் இளமையுடன் உள்ளது போல "டா" போட்டு பேசும் இனியவர்கள்.

                     இன்னும் எனக்கு எதாவது கடமைகள் உள்ளதா, "மனம்" எண்ணிற்று. மகளுக்கு கல்யாணம் செய்தாகிவிட்டது, நல்ல குடும்பம், நல்ல மாப்பிள்ளை (வரதட்சனை எல்லாம் வேணாம் மாமா!), நல்ல மாமியார் (அவ மருமக இல்ல, எனக்கு பொண்ணு இல்லாத கொறைய தீர்க்க வந்தவ) என நன்றாக இருக்கிறாள். மகனுக்கு கல்லூரியில் கடைசி வருடத்திற்கான முழு கட்டணத்தையும் கட்டியாச்சு, இனிமே கல்லூரியை முடித்து நல்ல வேலையில் சேர்ந்து அவன் பொழச்சுக்குவான். வங்கியில் கொஞ்சம் ரொக்கம் உள்ளது. மனைவிக்கு போதுமான அளவுக்கு நகைகள் உண்டு, வீட்டுக்கு தேவையான அத்தனையும் உண்டு. சில வருடங்களுக்கு முன் நண்பர்கள் சொன்னார்களே என்று அவர்களுடன் சேர்ந்து புறநகரில் வாங்கிய நிலத்தின் மதிப்பு இப்போ பல மடங்கு உயர்ந்து இருக்கு. வேறு என்ன வேண்டும், வேறு என்ன கடமை உள்ளது.

              மனதிற்குள் நெருப்பை பற்றவைத்து போல் தகித்தது. ஏதோ ஒரு குறை உள்ளது அது என்ன, என்ன என்று யோசித்தது. மனம் சட்டென விழித்தது, நினைவு வந்துவிட்டது.

              என் மனைவி என்னிடம் இது வேண்டும், அது வேண்டும் என எதையும் இந்த 25 வருடத்தில் கேட்டதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு நாள் "என்னங்க நான் உங்க கிட்ட ஒண்ணு கேட்பேன், மறுக்காம நிறைவேத்தனும் என்ன?" என்று பீடிகை போட்டாள். நானும் மனம் பதைக்க அடடா இவளுக்கு ஏதோ குறை வச்சுட்டோம் போல, அதனால் இவ கேக்கிறதா எப்படியாவது நிறைவேத்தனும் என்று மனதில் முடிவு செய்தவனாக, "சொல்லும்மா, என்ன வேணும் உனக்கு" என்றேன். "எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசைங்க, என் வாழ்க்கை முடியறதுக்குள்ளே எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும், போய் வந்துடனும், தயவு செய்து ஏற்பாடு பண்றீங்களா" என்று அவள் ஏக்கத்துடன் கேட்டது என்னை கரைய வைத்தது, "என்னம்மா இது, இதுக்கு போயா இத்தனை தயக்கம், எனக்கும் இந்த ஆச இருந்தது, ஆனா பயண அலைச்சல் உனக்கு ஒத்துக்கதே என்ற நினைப்பில் உன்கிட்ட சொல்லல, அதுக்கென்ன தாராளமா இந்த வருடத்திலேயே போகலாம்" என்று கூறி முடிக்கும் போது என் கண்கள் கண்ணீரால் நிறைந்து இருந்தது, அவளின் எண்ணமும் என் எண்ணத்தையே ஒத்திருப்பை நினைத்து.

        கடவுளே, அவளுக்கு கொடுத்த வாக்கை எப்படி காப்பாற்ற போறேன், எப்படி நடக்கும் என பல்வேறு மன குழப்பத்தால் என் "மனம்" வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

                         மேலும் சப்தங்கள் பெரிதாகிகொண்டே போனது, அந்த வாலிபன் மற்றவர்களை பார்த்து, ஒரு கை பிடிங்க, பஸ்சுல கடைசில இருக்கிற நீளமான் சீட்ல படுக்க வைக்கலாம் என்றான். பயணிகளில் ஒரு சிலர் மனம் வந்தும், வராமலும் 'என்னை' தூக்கி அந்த கடைசி சீட்டில் படுக்க வைத்தனர். அந்த வாலிபன் தான் இரண்டு கைகளையும் சேர்த்து என் நெஞ்சில் வைத்து மிதமான வேகத்தில் விட்டு விட்டு அழுத்த தொடங்கினான்.

                   இந்த ஜனங்களே இப்படி தான், வேடிக்கை பாக்கறதுன்னா போதும் கூட்டம் சேர்ந்துடுவாங்க, நெருக்கி அடிச்சி முன்னாடி வந்து பார்க்க துடிப்பங்க, யாரோ சிலர் பின்னாலிருந்து தள்ளினார்கள், என் நெஞ்சு முன்னால் உள்ள கம்பியில் மோத......

                            லொக்... லொக்.... இருமல் தொண்டையிலுருந்து எழுந்து அடைபட்டிறிந்த கற்றை வெளியிடவும், உட்செல்லவும் அனுமதித்தது.

சார், சார், எழுந்திருங்க என அந்த இளைஞன்  உலுக்கினான்,

மெதுவாக கண்திறந்தேன், சுற்றிலும் உள்ள 'மனிதர்களை' பார்த்தேன். மெதுவாக எழுந்து உட்கார்ந்ததும் அந்த இளைஜன் யாரிடமோ வாங்கிய தண்ணீரை குடிக்க கொடுத்தான். "சார், இலவச ஆம்புலன்ஸ் கிழே நிக்குது, எதுக்கும் மருத்துவமனைக்கு  போய் டாக்டர் கிட்ட ஒரு செக்-அப் பண்ணிக்குங்க, எப்பவோ  பள்ளியில் சொல்லிகொடுத்த முதலுதவி பாடம் இப்ப உதவி இருக்கு" என்று சொல்லியபடி என்னை கை தாங்கலாக அருகே நின்றிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிவிட்டான். சார், சார், என்றபடி ஓடி வந்த இருக்கையை பிடிக்கமுடியாமல் ஏமாந்து போன நபர், "சார், உங்க பை" என அந்த பணப்பையை என்னிடம் நீட்டினார்.

                             அவசர ஊர்தி மெதுவாக நகர தொடங்கியது, மனம் அந்த இளைஞ்சனை வாழ்த்தியபடியும்,   அறிமுகமில்லாமல் உதவிய உள்ளங்களை நோக்கி என் கரங்கள் தானாக குவிந்து உயர்ந்து அவர்களுக்கு என் நீர் தளும்பிய கண்களால் நன்றி சொன்னேன் .

 

திங்கள், 10 மே, 2010

என் மகள்

என் பாசமிகு மகளே,
என் வெற்றிடத்தை நிரப்ப வந்த பாசக் காற்று நீ,
வாழை அடி  வாழையாய் என் குலம் தழைக்க வந்தவளே
நீ வாழிய பல்லாண்டு நம் குலம் தழைக்க.
வாழைகன்றே  நான் இட்டிருப்பது அன்பு வேலி
உன்னை எந்த பிரச்சனைகளும் தீண்டாமலிருக்க.
என் கண்ணிமையில் உன்னை மூடி காக்க நினைக்கிறன்
நீயோ கண்ணுக்கெட்டாத  தூரத்தில் உன் தாயுடன்.
இது தான்
கடலோடியும் திரவியம் தேட வந்ததின் விலை.

வியாழன், 6 மே, 2010

பார்த்ததில்/படித்ததில்/கேட்டதில் ரசித்தது

படித்ததில்/ பார்த்ததில்/கேட்டதில் பிடித்தது

இப்போ மணி இரண்டு மணி 2.45 விடியற்காலை,

தமிழ் இனிமை, வார்த்தை, அருமை காரணமாக, விடிய விடிய தமிழ் பற்றி
விவாதித்து, தமிழ் இனிமை காரணமாக,
 தூக்கம் மறந்தோம்
எந்தனையோ கருத்துகள் இடை இடையோ வந்தலூம்,
 சில உடனடியாக பத்வேற்ற thondriyathu  (மற்றவை பின்பு பதிவேற்றுகிர்றேன்)
(நண்பரை வேண்டி மறு முறை கூறுமாறு பணிவன்புடன் கேட்டு இங்கு பதிகிறேன்) 

குங்குமம்

ஜாதிக்கு ஜாதி,
மதத்துக்கு மதம்,
பெண்ணுக்கு பெண்,
பாகுபாடு பார்க்கும்
"படுபாவி நீ".

( குங்குமம்,  ஒவ்வொரு சாதிக்கும், மதத்துக்கும், விதவைக்கும், சுமங்கலி பெண்ணுக்கும், வேறு விதமாக தோன்றுவதை இவர் கூறுவதை தூங்காமல் கேட்பதை தவிர வேறு வழிஇல்லை)

கருத்தை பகிர்க கமேன்டிலே.

பார்த்ததில்/படித்ததில்/கேட்டதில் ரசித்தது

புதன், 5 மே, 2010

நம்பிக்கையே வெற்றி

கொட்டிவிட துடிக்கிறேன்,  வார்த்தைகள் இல்லை என்னிடம்,
முடிந்த வரை நிரப்புகிறேன் வார்த்தைகளை இட்டு.
உழைப்பு ஒன்று தானே உன்னிடம் "மூலதனம்"
நம்பிக்கை ஒன்றே "வாழ்க்கை வரம்"
வாழ்க்கையில் முன்னேற "உழைப்பை நம்பு"
நம்பிக்கையே முன்னேற்றும் சமுகத்தில் இன்று.
நல்லதும் கெட்டதும் கலந்ததே சமூகம்,
சமூகமே நீ தானே, உனக்கு  எது தேவை நீ முடிவு செய்.
வெற்றி என்பது உன் காலடி நிழலே
உயர்ந்து நில்,
நிழல் பெரிதாகும்
வெற்றி உனதாகும்.

(கறுத்த சொன்னா நல்லாருக்கும்)

பஞ்ச பூதத்துல எந்த பூதம் நல்ல பூதம்

மனிதர்களில் பஞ்ச பூதத்தை காண முடியும்,  உதரணமா "அந்த ஆள பாருங்க காத்தா ஓடறான் (காற்று), அவள்  கிட்ட கூட நெருங்க முடியாது அவ நெருப்பு மாதிரி (நெருப்பு), அவனுக்கு வானம் போல மனசுப்பா (வானம்),    அந்த குழந்தை நல்ல நிலம் போல எத, விதைத்தாலும் வளரும் (நிலம்), பாசத்துக்கு அவன் தண்ணி மாதிரி உருகிவிடுவான் (நீர்)" என்று பல்வேறு மேற்கோள் காட்டி பேசறத பார்த்து இருப்பீங்க. அதனால இந்த பஞ்ச பூதங்களில் எந்த பூதம் எல்லாருக்கும் ஒத்து வரும் என பார்க்கலாமா? (பூதம் பூதம்னு ஒரு உருவகத்துக்கு சொல்கிறேன்)
பொதுவா ஒரு பூதம் மற்றொரு பூதமா ஆகாது அல்லது முடியாது, சில நேரம் அது வேறொரு பூதமா மாற வாய்ப்பு உள்ளது. 
நெருப்பு - இது கல்லா, காத்தா, தண்ணியா மாற முடியாது.
நிலம்  - இது நெருப்பா,  காத்தா, தண்ணியா மாற முடியாது.
ஆகாயம் - இது கல்லா, காத்தா, நெருப்பா, தண்ணியா மாற முடியாது.
காற்று - இது கல்லா, நெருப்பா, தண்ணியா மாற முடியாது.

ஆனால், நீர் மட்டும் கல்லா, நெருப்பா, தண்ணியா, ஆகயமா மாற முடியும்.
எப்படின்னு பாக்கலாமா,
1 .  நீர நல்ல குளிர வச்சா ஐஸ் ஆகா மாறிடும் - கல்லு மாதிரி - நிலம்.
2 . நீர நல்லா கொதிக்கவச்சா சூட ஆய்டும் - நெருப்பு மாதிரி  - நெருப்பு.
3 . கொதிக்க வைக்க வைக்க அது ஆவியா மாறி காற்றுல மற்றும்  ஆகயதுல கலந்திடும் - காற்று  & ஆகாயம்.

மேலும் நீரால் மட்டுமே அதனுடன் சேரும் உருவத்தை, நிறத்தை பெற முடியும்,
மனித மனமும் நீரைப்போல தான், அதுல எப்பவும் எண்ண அலை ஓடிகிட்டே இருக்கும், பிரச்சினைக்கு ஏற்ப நிறம் மாறும், கோபத்துல கொதிக்கும், மன உறுதியில கல்லாகும், எப்படி எவ்வளவோ சொல்லலாம்.

உங்களோட கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளவும். எந்த பூதம் சிறந்த பூதம்.


செவ்வாய், 4 மே, 2010

படித்தேன்/பார்த்தேன் ரசித்தேன்

எனது அலுவலக பணி காரணமாக ஒரு புதிய என்னை விட வயதில் குறைந்த வேற்று மொழி பேசும் நண்பர் கிடைத்தார். அவரின் சுறுசுறுப்பு, மற்றவர்களிடம் பழகும் குணம் என்னை வெகுவாக கவர்ந்தது. அது அவர்க்கு இயல்பிலேயே வந்ததா அல்லது அவர் எதிரே ஒட்டி வைத்து இருந்த வாசகத்தில் உள்ளபடி அவர் நடக்கிறாரா என்ற எண்ணம் வந்தது. எனக்கு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.

அந்த ஆங்கில வாசகத்தை அப்படியே மொழி பெயர்த்து தருகிறேன் நீங்களும் இதன் சிறப்பை உணர்வீர்கள், இதோ

"நான் கற்றுகொண்டது என்னவெனில்,

மனிதர்கள் மறக்ககூடும் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று,

மனிதர்கள் மறக்ககூடும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று

ஆனால்

மனிதர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள் நீங்கள் அவர்களின் மனதை எப்படி பாதிதீர்கள் என்று.

மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடதீர்கள்

ஏனெனில் நீங்கள் அந்த விளையாட்டில் வெள்ளகூடும்

ஆனால்

நீங்கள் அந்த மனிதரை இழக்கக்கூடும் 'என்றென்றும்' .

ஞாயிறு, 2 மே, 2010

சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே

பிரதீஷ்... பிரதீஷ்... எழுந்துருடா, எவ்வளவு நேரமா எழுப்புறது, மணி ஏழே கால் ஆகுது காலேசுக்கு நேரம் அவளியா சீக்கிரமா எழுந்து கிளம்புற வழிய பாரு. புரண்டு படுத்தான் பிரதீஷ். ச்சே ! இந்த அப்பாவுக்கு வேற வேலையே கிடையாது இன்னும் எழுந்துகொள்ளவில்லை என்றால் அவ்வளவு தான் காலையிலேய அப்பா கிட்ட இருந்து நல்ல வாங்கி கட்டிக்கவேண்டியது தான் என்று முணுமுணுத்தபடியே எழுந்தான்.
அம்மா சீக்கிரம் டிபன் வை லேட்டவுது என்றபடி தலை வாரி அதை கலைத்து கொண்டான். இப்ப ஏன்டா கத்தறே, அதுக்கு காலையிலேயே சீக்கிரம் எழுந்து கிளம்பனும் அத விட்டுட்டு இப்ப பறக்கிறே என்றபடி டிபனை வைத்தார் அம்மா. என் சீக்கிரமா பறக்கிறேனா இப்ப தான் எல்லா கல்லூரி பெண்களும் வர நேரம் என மனிதில் நினைத்தபடி வேகமாய் சாப்பிட்டான்.
தெருவில் இறங்கி நாலு வீடு தண்டி சென்றதும் இவனை பார்த்துவிட்டு எப்போதோ தயாராகி இருந்த நண்பன் சேகர் "இன்னைக்கும் லேட்டாடா" என்றபடி சேர்ந்துகொண்டான்.
பஸ் ஸ்டாண்டில் இவனை ஒத்த மாணவர்கள் நின்றுகொண்டு பஸ்ஸை எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்தார்கள்.
கல்லூரியை அடைந்து வகுப்புகளை ஒப்பேற்றி அல்லது தூங்கி வழிந்து, நண்பர்களை கிண்டல் செய்து மாலையில் பேருந்தை பிடித்து வழக்கம் போல் படியில் தொங்கிக்கொண்டே வந்தான் பிரதீஷ். திடீரெண்டு தான் கவனித்தான், இதற்க்கு முன் இப்படி ஆனதில்லை, எத்தனையோ பெண்களை கண்டிருக்கிறான் ஆனால் இப்படி மனதை பறிக்கும் படியான அழகை கண்டதில்லை. நடத்துனர் இருக்கைக்கு அருகே நின்று கொண்டிருந்த அவளை அருகில் சென்று காண மனம் துடித்தது. மேலும் இரண்டு படிக்கட்டுகளை ஏறி நடத்துனர் பக்கத்தில் நின்றான். அவள் பார்க்க மாட்டல என்ற எண்ணம் மேலோங்க அவளையே எவ்வளவு நேரம்தான் பார்த்துகொண்டு இருந்தான் என்று தெரியவில்லை, "டே இறங்குடா போதும், ஸ்டாப்பிங் வந்துடுச்சு" என்று சேகர் உலுக்கிய பிறகே அவன் நிதானத்துக்கு வந்தான். சட்டென கிழே இறங்கியவன் அவளை ஜன்னல் வழியே பார்க்க முயற்சிதான். ஆனால் அவள் அங்கு இல்லாததை கண்டு மனம் நொந்தான். சட்டென்று அவள் இறங்கி அவனை கடந்து சென்ற அவள் செல்லும்முன் அவனை ஒரு பார்வை பார்த்து சிறிய புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு சென்றால். இவனுக்கு உலகமே சிறிய கால் பந்து போன்று தோன்றியது.
என்னடா அவளையே பார்த்து கிட்டு இருக்க, அவல உனக்கு தெரியாதா, அவ நம்ப தெருவுல தான் இருக்கா, நம்ப ரூட்டுல தான் தினமும் வருவா. நம்ப குரூப் தான் , இப்ப பிரஸ்ட் இயர் படிக்கிறாள் என்று சேகர் அவளை பத்தி முழு தகவலையும் சொல்லி முடித்தான். மச்சான் ப்ளீஸ் அவள் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குடா, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா என்றான். பிரதீஷ் உண்மையிலேயே உனக்கு அவல புடிச்சுருக்கா அப்போ நான் சொல்றபடி செய் என்று தனக்கு தெரிந்தவற்றை விவரித்தான் சேகர்.
மணி ஐந்து முப்பது அலாரம் அடித்து வீட்டை எழுப்பியது.
யார் இவ்வளவு சீக்கிரம் எழுந்துகறது என்று கூறியபடியே எழுந்த அப்பாவிற்கு தன் கண்களை நம்ப முடியாமல் முழித்தார். அங்கு "அம்மா இன்னைக்கு நான் பால் வாங்க போறேன்" என்று கூறியபடி அம்மாவிடம் பால் கார்டையும் பையும் பிடிங்கிகொண்டிருந்தன் பிரதீஷ். அவ தினமும் காலைல பால் வாங்க வருவா என்று சேகர் கூறியது மனதுக்குள் ஒலித்தது.


சனி, 1 மே, 2010

காதலா, காமமா - என் கவுஜ

பேதை குரங்கு மனம்
பெண் அவளை கண்டுவிட்டால்
கள்ளுண்ட மனம் போல்
காண களித்தாடி
காம வெறி கூடி
களி நடம் புரியுதடா
மாண்பு தனை மறக்குதடா

வலைப் பூ சமூகத்துக்கு வணக்கம்

என்னை இந்த மண்ணில் பெற்றெடுத்த அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என் சிரம் தாழ்த்தி அவர்களின் காலை தொட்டு வணங்கி எனது இந்த புதிய உறவு பாலத்தை தொடங்குகின்றேன். இந்த இனிய நேரத்தில் என் வாழ் நாளில் எப்போதும் துணை நிற்கும் சொந்தங்களையும் அன்பு நண்பர்களையும் இங்கு நினைவு கூறுகிறேன் உழைப்பாளர் தினமும் என் இனிய நண்பனின் பிறந்த நாளான இன்று உங்களை முதன் முதலாய் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் .
இன்னிக்கி இது போதும் "பட்டாச " சீக்கிரமா கொளுத்தலாம்.