பிரார்த்தனை
பிரார்த்தனையால்
வேண்டியதெல்லாம் கிடைத்திடும்
இறைவனை தொழுதால்,
வேறென்ன வேண்டும் உனக்கு.
நான் இந்த மதம்,
அந்த மதத்து கடவுள், கடவுள் கிடையாது என்றால் எப்படி.
எனக்கு என் தாயை தெரியும்,
உனக்கு உன் தாயை தெரியும், ஆனால்
என் தாய் மட்டும் தான் உயரந்தவள் என்றால் எப்படி
எல்லா தாயும் தன் தாய் போல் ஆகுமா.
ஆனால் தாயுள்ளம் தாயுள்ளம் தான்,
வேறொரு குழந்தை அழுதாலும்
அவள் உள்ளம் உருகிடும்.
வாழ்க்கையில் உனக்கு என்ன வேண்டும் என பட்டியலிடு,
அதை கடவுள் முன் வை நீ கேட்டதெல்லாம் கிடைத்திடும்.
இது என்ன வியாபாரமா வேண்டியதை கடவுள் நமக்கு தர.
இது ஒரு பந்தம்,
பக்தனுக்கும் கடவுளுக்கும்.
நீ எப்படி சூன்யத்திலிருந்து உருவாகி மீண்டும்
சூன்யமாய் மறைவதை நம்புவாய் அல்லவா.
அப்படித்தானே இதையும் நம்பவேண்டும்.
வாழ்க்கை சிறியது, நம்பிக்கை பெரியது.
நம்பிக்கையில் தான் உலகம் சுழல்கிறது.
வாழ்ந்து தான் பார்ப்போம் நம்பிக்கையான பிரார்த்தனையுடன்.
நல்லாயிருக்குங்க கவிதை
பதிலளிநீக்குஎனக்கு என் தாயை தெரியும்,
பதிலளிநீக்குஉனக்கு உன் தாயை தெரியும், ஆனால்
என் தாய் மட்டும் தான் உயரந்தவள் என்றால் எப்படி
எல்லா தாயும் தன் தாய் போல் ஆகுமா.
ஆனால் தாயுள்ளம் தாயுள்ளம் தான்,///
good one