புதன், 2 ஜூன், 2010

பணவீக்கம் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா நண்பர்களே?

பணவீக்கம் (money inflation)

இந்திய பொருளாதாரம்

இந்திய பணவீக்கம் மார்ச் 2010 முடிவில் 14.86 சதமாக உயர்ந்திருக்கிறது, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமே அதற்கு காரணம் என்றெல்லாம் படித்திருப்பீர்கள் அல்லது கேள்வியாவது பட்டிருப்பீர்கள்.

பணவீக்கம், பணவீக்கம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா நண்பர்களே, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பணவீக்கத்தை கணக்கிட இரண்டு முறைகள் பின்பற்றபடுகின்றன,

1 . மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் ( Wholesale Price Index Inflation - சுருக்கமா WPI)
2 . நுகர்வோர் விலை பட்டியல் பணவீக்கம் (Consumer Price Index Inflation - சுருக்கமா CPI)

நமது இந்தியாவில் மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் (WPI) முறையை உபயோகபடுத்துகின்றனர்.

வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலை பட்டியல் பணவீக்கம் (CPI) முறையை பயன்படுத்துகின்றனர்.

WPI முறை 1902 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இம்முறையே பல பொருளாதார வல்லுனர்கள் மற்றும் துறை வல்லுனர்களின் முயற்சியால் 1970 ஆம் ஆண்டு மேலைநாடுகளில் மாற்றப்பட்டு அங்கு உபயோகத்தில் உள்ளது.

WPI முறையில் பொருட்கள் / சரக்குகள் மொத்த விலை சந்தையில் விற்கப்படும்போது ஏற்படும் ஏற்ற-இறக்க விலை மாற்றத்தால் பணவீக்கம் நிர்ணயக்கபடுகிறது.
இந்தியாவில் மொத்தம் 435 பொருட்கள் WPI முறைக்கு கணக்கில் எடுத்துகொள்ளபடுகிறது.

வாரந்தோறும் வெளியிடப்படும் பணவீக்க விகிதம் இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்பைடயில் தான் என்று தெரியுமா!


இனி பணவீக்கம் எப்படி கணகிடுகின்றனர் என்று பார்ப்போமா?

உதாரணத்துக்கு,

2001 இல் சர்கரையின் விலை ருபாய் 40 ,

2010 இல் சர்கரையின் விலை ருபாய் 60 என கொள்வோம்.


2010 இல் மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் ( Wholesale Price Index Inflation - WPI) எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள பின்வரும் கணக்கினை இடுவோம்


( சர்க்கரை விலை 2010 இல் - சர்க்கரை விலை 2001 இல்) / சர்க்கரை விலை 2001 இல் x 100 ),

அதாவது


( Rs.60 - Rs.40) / Rs.40 x 100 = 50 % ஆகா உயர்ந்திருக்கிறது (உதாரணதிற்கு விலை கொடுத்துள்ளேன், சந்தை நிலவரம் அறிக).


இதை போலவே மற்ற 434 பொருட்களுக்கும் கணக்கிடப்பட்டு மொத்த சதவிகிதமும் வகுக்கப்பட்டு அரசால் வெளியிடப்படுகிறது.

4 கருத்துகள்:

  1. மின்னஞ்சலில் படித்திருக்கிறேன்.

    பகிர்விற்கு நன்றி.

    இந்த பதிவை முகப்புத்தகத்தில் வெளியிடலாம.? அனுமதி தேவை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி சர்புதின்.
    வருகை தொடர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி பட்டர்பிளை சூர்யா.
    அனுமதி உண்டு.

    பதிலளிநீக்கு