ஒரு பக்க கதைகள் - 1
"அம்மா நான் பாசாயிட்டேன்"
குமாருக்கு இதய துடிப்பு அதிகரித்துகொண்டே இருந்தது. அவனுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிவருகின்றன.
இது அவனுடைய வாழ்கையின் போக்கையே மாற்றப்போகும் தினம் என்பது தெளிவாக உணர்ந்திருந்தன். அவனுடன் படித்த நண்பர்கள் வசதியில் உயர்ந்தவர்களாகவும், இன்று தோற்றால் மறுபடி பரீட்சை எழுதி வெற்றி பெற பண பலமும், சுற்றத்தார் உதவியும் நிறைந்தவர்கள். குமாருக்கு அப்படி இல்லை. அவன் வீட்டுக்கு ஒரே பையன், அவன் அப்பாவும் அம்மாவும் அந்த சிறிய கிராமத்தில் விவசாய கூலிகளாக வேலை செய்கிறார்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் மகனை படிக்க வைக்க முயற்சித்து பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். அதுவும் பள்ளி கட்டணம், புத்தகம் எல்லாம் இலவசமாக கிடைப்பதால் ஏதும் பிரச்சினை இல்லாமல் இருந்தது.
ஆனால் விதி ஊரை ஒட்டிய நெடுஞ்சாலையில் புதியதாக திறந்திருக்கும் பெட்ரோல் பங்கினால் வந்தது. அந்த பங்கின் முதலாளி குமார் அப்பா வேலை செய்யும் பண்ணையாருடையது. அவர் உரிமையோடு குமாரின் அப்பாவை கூப்பிட்டு "என்னப்பா உன் பையன் பத்தாவது பரீட்சை எழுதி இருக்கானாமே, எப்படி, தேறுவானா மாட்டானா, எப்படி இருந்தாலும் பரவாயில்லை உன் பையனை என்னோட பெட்ரோல் பங்குல கேசியர் வேலைக்கு போடறேன், உடனே அவன வேலையில போய் சேர சொல்லு" என்றார். குமாரின் அப்பாவுக்கோ அவரின் கட்டளையை மீற முடியாத தர்மசங்கடமான நிலை. குமாரின் அம்மாவிடம் இதை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது குமார் வீட்டினுள் நுழைந்தான். "இங்க பாருங்க, அவன படிக்க வைக்க நாம இது வர ஒன்னும் பெரிய செலவு ஒன்னும் பண்ணதில்ல, அவன் படிக்கணும் என்று ஆசை படறான், அவன் படிச்சு முன்னேறினா நமக்கு தானுங்க பெரும, அதனால அவன் தொடர்ந்து படிக்கட்டும்" என்றார். குமாரின் அப்பாவும் இதற்க்கு ஒத்து கொண்டார் ஒரு நிபந்தனையோடு, பாஸாயிட்டா தொடர்ந்து படிக்கலாம், ஆனா பெயிலாயிட்டா பெட்ரோல் பங்க் வேலைக்கு போகணும் என்று. நண்பன் பேப்பரை கொடுத்து பரீட்சை நம்பரை பார்க்க சொன்னான். "அம்மா நான் பாசாயிட்டேன்" "அம்மா நான் பாசாயிட்டேன்"
டேய் குமார், குமார் என்னடா பகல் கனவு, கஸ்டமர் வந்து இருக்காங்க பாரு, போய் பில்லு போடற வழியை பாரு என்றபடி கல்லாவில் உட்கார்ந்தார் பண்ணையார்.
good
பதிலளிநீக்குகதை வாழ்வியலைப் பிரதிபலிக்கிறது நண்பா.
பதிலளிநீக்கு//கலாநேசன் சொன்னது…
பதிலளிநீக்குgood
13 ஜூன், 2010 4:41 am //
//முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
கதை வாழ்வியலைப் பிரதிபலிக்கிறது நண்பா.//
நன்றி கலாநேசன்.
நன்றி முனைவர் இரா. குணசீலன்.
தங்களின் வருகையும், கருத்துகளும் என்னை மென்மேலும் எழுததூண்டும்.
தங்களின் தொடர் வருகையும், கருத்துகளையும் தொடர்ந்து எதிர்பார்கிறேன்.