புதன், 5 மே, 2010

பஞ்ச பூதத்துல எந்த பூதம் நல்ல பூதம்

மனிதர்களில் பஞ்ச பூதத்தை காண முடியும்,  உதரணமா "அந்த ஆள பாருங்க காத்தா ஓடறான் (காற்று), அவள்  கிட்ட கூட நெருங்க முடியாது அவ நெருப்பு மாதிரி (நெருப்பு), அவனுக்கு வானம் போல மனசுப்பா (வானம்),    அந்த குழந்தை நல்ல நிலம் போல எத, விதைத்தாலும் வளரும் (நிலம்), பாசத்துக்கு அவன் தண்ணி மாதிரி உருகிவிடுவான் (நீர்)" என்று பல்வேறு மேற்கோள் காட்டி பேசறத பார்த்து இருப்பீங்க. அதனால இந்த பஞ்ச பூதங்களில் எந்த பூதம் எல்லாருக்கும் ஒத்து வரும் என பார்க்கலாமா? (பூதம் பூதம்னு ஒரு உருவகத்துக்கு சொல்கிறேன்)
பொதுவா ஒரு பூதம் மற்றொரு பூதமா ஆகாது அல்லது முடியாது, சில நேரம் அது வேறொரு பூதமா மாற வாய்ப்பு உள்ளது. 
நெருப்பு - இது கல்லா, காத்தா, தண்ணியா மாற முடியாது.
நிலம்  - இது நெருப்பா,  காத்தா, தண்ணியா மாற முடியாது.
ஆகாயம் - இது கல்லா, காத்தா, நெருப்பா, தண்ணியா மாற முடியாது.
காற்று - இது கல்லா, நெருப்பா, தண்ணியா மாற முடியாது.

ஆனால், நீர் மட்டும் கல்லா, நெருப்பா, தண்ணியா, ஆகயமா மாற முடியும்.
எப்படின்னு பாக்கலாமா,
1 .  நீர நல்ல குளிர வச்சா ஐஸ் ஆகா மாறிடும் - கல்லு மாதிரி - நிலம்.
2 . நீர நல்லா கொதிக்கவச்சா சூட ஆய்டும் - நெருப்பு மாதிரி  - நெருப்பு.
3 . கொதிக்க வைக்க வைக்க அது ஆவியா மாறி காற்றுல மற்றும்  ஆகயதுல கலந்திடும் - காற்று  & ஆகாயம்.

மேலும் நீரால் மட்டுமே அதனுடன் சேரும் உருவத்தை, நிறத்தை பெற முடியும்,
மனித மனமும் நீரைப்போல தான், அதுல எப்பவும் எண்ண அலை ஓடிகிட்டே இருக்கும், பிரச்சினைக்கு ஏற்ப நிறம் மாறும், கோபத்துல கொதிக்கும், மன உறுதியில கல்லாகும், எப்படி எவ்வளவோ சொல்லலாம்.

உங்களோட கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளவும். எந்த பூதம் சிறந்த பூதம்.


1 கருத்து:

  1. அன்புடையீர்,
    பதிவுலகத்தில் பாதம் பதித்திருக்கும் தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். மனிதனை எழுதுங்கள் மனித உறவுகளை எழுதுங்கள் . இயற்கையை எழுதுங்கள் இயற்கைக்கும் மனிதனுக்கும் முக்கியமாய் பெண்ணுக்கும் இயற்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை எழுதுங்கள்.
    வெற்றி உங்கள் கையில்

    வாழ்க‌

    பதிலளிநீக்கு