ஞாயிறு, 2 மே, 2010

சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே

பிரதீஷ்... பிரதீஷ்... எழுந்துருடா, எவ்வளவு நேரமா எழுப்புறது, மணி ஏழே கால் ஆகுது காலேசுக்கு நேரம் அவளியா சீக்கிரமா எழுந்து கிளம்புற வழிய பாரு. புரண்டு படுத்தான் பிரதீஷ். ச்சே ! இந்த அப்பாவுக்கு வேற வேலையே கிடையாது இன்னும் எழுந்துகொள்ளவில்லை என்றால் அவ்வளவு தான் காலையிலேய அப்பா கிட்ட இருந்து நல்ல வாங்கி கட்டிக்கவேண்டியது தான் என்று முணுமுணுத்தபடியே எழுந்தான்.
அம்மா சீக்கிரம் டிபன் வை லேட்டவுது என்றபடி தலை வாரி அதை கலைத்து கொண்டான். இப்ப ஏன்டா கத்தறே, அதுக்கு காலையிலேயே சீக்கிரம் எழுந்து கிளம்பனும் அத விட்டுட்டு இப்ப பறக்கிறே என்றபடி டிபனை வைத்தார் அம்மா. என் சீக்கிரமா பறக்கிறேனா இப்ப தான் எல்லா கல்லூரி பெண்களும் வர நேரம் என மனிதில் நினைத்தபடி வேகமாய் சாப்பிட்டான்.
தெருவில் இறங்கி நாலு வீடு தண்டி சென்றதும் இவனை பார்த்துவிட்டு எப்போதோ தயாராகி இருந்த நண்பன் சேகர் "இன்னைக்கும் லேட்டாடா" என்றபடி சேர்ந்துகொண்டான்.
பஸ் ஸ்டாண்டில் இவனை ஒத்த மாணவர்கள் நின்றுகொண்டு பஸ்ஸை எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்தார்கள்.
கல்லூரியை அடைந்து வகுப்புகளை ஒப்பேற்றி அல்லது தூங்கி வழிந்து, நண்பர்களை கிண்டல் செய்து மாலையில் பேருந்தை பிடித்து வழக்கம் போல் படியில் தொங்கிக்கொண்டே வந்தான் பிரதீஷ். திடீரெண்டு தான் கவனித்தான், இதற்க்கு முன் இப்படி ஆனதில்லை, எத்தனையோ பெண்களை கண்டிருக்கிறான் ஆனால் இப்படி மனதை பறிக்கும் படியான அழகை கண்டதில்லை. நடத்துனர் இருக்கைக்கு அருகே நின்று கொண்டிருந்த அவளை அருகில் சென்று காண மனம் துடித்தது. மேலும் இரண்டு படிக்கட்டுகளை ஏறி நடத்துனர் பக்கத்தில் நின்றான். அவள் பார்க்க மாட்டல என்ற எண்ணம் மேலோங்க அவளையே எவ்வளவு நேரம்தான் பார்த்துகொண்டு இருந்தான் என்று தெரியவில்லை, "டே இறங்குடா போதும், ஸ்டாப்பிங் வந்துடுச்சு" என்று சேகர் உலுக்கிய பிறகே அவன் நிதானத்துக்கு வந்தான். சட்டென கிழே இறங்கியவன் அவளை ஜன்னல் வழியே பார்க்க முயற்சிதான். ஆனால் அவள் அங்கு இல்லாததை கண்டு மனம் நொந்தான். சட்டென்று அவள் இறங்கி அவனை கடந்து சென்ற அவள் செல்லும்முன் அவனை ஒரு பார்வை பார்த்து சிறிய புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு சென்றால். இவனுக்கு உலகமே சிறிய கால் பந்து போன்று தோன்றியது.
என்னடா அவளையே பார்த்து கிட்டு இருக்க, அவல உனக்கு தெரியாதா, அவ நம்ப தெருவுல தான் இருக்கா, நம்ப ரூட்டுல தான் தினமும் வருவா. நம்ப குரூப் தான் , இப்ப பிரஸ்ட் இயர் படிக்கிறாள் என்று சேகர் அவளை பத்தி முழு தகவலையும் சொல்லி முடித்தான். மச்சான் ப்ளீஸ் அவள் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குடா, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா என்றான். பிரதீஷ் உண்மையிலேயே உனக்கு அவல புடிச்சுருக்கா அப்போ நான் சொல்றபடி செய் என்று தனக்கு தெரிந்தவற்றை விவரித்தான் சேகர்.
மணி ஐந்து முப்பது அலாரம் அடித்து வீட்டை எழுப்பியது.
யார் இவ்வளவு சீக்கிரம் எழுந்துகறது என்று கூறியபடியே எழுந்த அப்பாவிற்கு தன் கண்களை நம்ப முடியாமல் முழித்தார். அங்கு "அம்மா இன்னைக்கு நான் பால் வாங்க போறேன்" என்று கூறியபடி அம்மாவிடம் பால் கார்டையும் பையும் பிடிங்கிகொண்டிருந்தன் பிரதீஷ். அவ தினமும் காலைல பால் வாங்க வருவா என்று சேகர் கூறியது மனதுக்குள் ஒலித்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக