புதன், 26 மே, 2010
கை 'கொடுக்குக்' கை
பழைய கதை
பகலும் இரவும் கலக்கும் அந்தி மாலை நேரம்
குருவின் நிழல் பின்புரமாய் சரிய,
தள்ளிவிட்ட மகிழ்ச்சியில் வீழும் சூரியன்!
மாலை தென்றலும் ஆற்றங்கரை குளிரும்
நிழல் அது கால் தட்டாமல்
அறிவு பசியுடன் சிஷ்யன் பின் தொடர,
குருவின் சிந்தனை கலைந்தது.
பார்வை கூர்மை கொண்டது, மனமோ ஈரம் நிறைந்தது.
ஆற்றினிலே ஒரு தேள் தத்தளித்தது,
உயிர் தக்க கொந்தளித்தது.
கைகொண்டு தூக்கினார் வெடுக்கென்று கொட்டிற்று,
அது அதன் குணம்,
மீண்டும் மீண்டும் முயற்சி,
இது மனித மனம்.
முயற்சி தான் மெய் வருத்த கூலி தந்தது,
அச்சிறு உயிரும் கரை நடந்தது
புரியா சிறுவன் பணிந்தான் குருவினை,
குரு இதழ் விரிந்தார்
அதன் குணம் மாறா
இது என் குணம்,
இதுவே!
கடவுள் மனிதனை ஆறறிவுடன் படைத்ததின் சாட்சி.
புதிய கதை
வசந்தகள் ஓடின, பழையது கழிந்தது
புதியன பிறந்தன, சிஷ்யன் குருவானான்
அதே ஆற்றங்கரை, உடன் புதிய சிஷ்யர்கள்,
வேறொரு தேள் வழக்கம்போல் தத்தளித்தபடி தண்ணீரில்,
குருவும் முன்றார் கைகொண்டு காப்பாற்றிட
கொடு நஞ்சு தேளும் கொட்டிற்று முனையும் போதெல்லாம்
கடைசியில் மனம் தளரா குரு
முழு முயற்சியின் பலனாய் கரை சேர்த்தார் வலியோடு,
புதிய சிஷ்யர்கள் பணிந்து புரிய முற்படு முன்
முந்திகொண்டது அந்த விஷ தேள்,
வார்த்தைகளில் விஷமும், பேச்சாலும் கொட்டியது,
"தெளிவாய் தான் உள்ளீரா".
("இன்னும் அறிவு வரலியா")
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக