kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 மே, 2010

கை 'கொடுக்குக்' கை



பழைய கதை

பகலும் இரவும் கலக்கும் அந்தி மாலை நேரம்

குருவின் நிழல்  பின்புரமாய் சரிய, 
தள்ளிவிட்ட மகிழ்ச்சியில் வீழும் சூரியன்!

மாலை தென்றலும் ஆற்றங்கரை குளிரும்

நிழல் அது கால் தட்டாமல்
அறிவு பசியுடன் சிஷ்யன் பின் தொடர,

குருவின் சிந்தனை கலைந்தது.
பார்வை கூர்மை கொண்டது, மனமோ ஈரம் நிறைந்தது.

ஆற்றினிலே ஒரு தேள் தத்தளித்தது,
உயிர் தக்க கொந்தளித்தது.

கைகொண்டு தூக்கினார் வெடுக்கென்று கொட்டிற்று,
அது அதன் குணம்,

மீண்டும் மீண்டும் முயற்சி,

இது மனித மனம்.

முயற்சி தான் மெய் வருத்த கூலி தந்தது,
அச்சிறு உயிரும் கரை நடந்தது

புரியா சிறுவன் பணிந்தான் குருவினை,

குரு இதழ் விரிந்தார்
அதன் குணம் மாறா
இது என் குணம்,

இதுவே!
கடவுள் மனிதனை ஆறறிவுடன் படைத்ததின் சாட்சி.

புதிய கதை

வசந்தகள் ஓடின, பழையது கழிந்தது
புதியன பிறந்தன, சிஷ்யன் குருவானான்

அதே ஆற்றங்கரை, உடன் புதிய சிஷ்யர்கள்,
வேறொரு தேள் வழக்கம்போல் தத்தளித்தபடி தண்ணீரில்,

குருவும் முன்றார் கைகொண்டு காப்பாற்றிட
கொடு நஞ்சு தேளும் கொட்டிற்று முனையும் போதெல்லாம்

கடைசியில் மனம் தளரா குரு
முழு முயற்சியின் பலனாய் கரை சேர்த்தார் வலியோடு,

புதிய சிஷ்யர்கள் பணிந்து புரிய முற்படு முன்
முந்திகொண்டது அந்த விஷ தேள்,

வார்த்தைகளில் விஷமும், பேச்சாலும் கொட்டியது,
"தெளிவாய் தான் உள்ளீரா".
("இன்னும் அறிவு வரலியா")

திங்கள், 17 மே, 2010

வார்த்தை வரம்

வார்த்தை வரம்

இது வார்த்தைகள் இல்லா புதிய உலகம்
வார்த்தை வரம் வாங்கினேன், இறைவனிடம்.
அறிமுக முயற்சியாய் கடவுள் பணித்தார்,
மூன்று வார்த்தைகள் தோன்றும்
கவனமாய் உபயோகி
அதன் பின் உன்னை கண்டேன்
என் உதடுகள் தானாக முணுமுணுத்தது
(1) அடடா (2) என்ன (3) அழகு
புதிய வார்த்தைகள் இல்லை என்னிடம்
என் காதலை சொல்ல.

திங்கள், 10 மே, 2010

என் மகள்

என் பாசமிகு மகளே,
என் வெற்றிடத்தை நிரப்ப வந்த பாசக் காற்று நீ,
வாழை அடி  வாழையாய் என் குலம் தழைக்க வந்தவளே
நீ வாழிய பல்லாண்டு நம் குலம் தழைக்க.
வாழைகன்றே  நான் இட்டிருப்பது அன்பு வேலி
உன்னை எந்த பிரச்சனைகளும் தீண்டாமலிருக்க.
என் கண்ணிமையில் உன்னை மூடி காக்க நினைக்கிறன்
நீயோ கண்ணுக்கெட்டாத  தூரத்தில் உன் தாயுடன்.
இது தான்
கடலோடியும் திரவியம் தேட வந்ததின் விலை.

புதன், 5 மே, 2010

நம்பிக்கையே வெற்றி

கொட்டிவிட துடிக்கிறேன்,  வார்த்தைகள் இல்லை என்னிடம்,
முடிந்த வரை நிரப்புகிறேன் வார்த்தைகளை இட்டு.
உழைப்பு ஒன்று தானே உன்னிடம் "மூலதனம்"
நம்பிக்கை ஒன்றே "வாழ்க்கை வரம்"
வாழ்க்கையில் முன்னேற "உழைப்பை நம்பு"
நம்பிக்கையே முன்னேற்றும் சமுகத்தில் இன்று.
நல்லதும் கெட்டதும் கலந்ததே சமூகம்,
சமூகமே நீ தானே, உனக்கு  எது தேவை நீ முடிவு செய்.
வெற்றி என்பது உன் காலடி நிழலே
உயர்ந்து நில்,
நிழல் பெரிதாகும்
வெற்றி உனதாகும்.

(கறுத்த சொன்னா நல்லாருக்கும்)