விரித்த விழி மூடவில்லை,
உள்ளிழுத்த ஆவி வெளிவரவில்லை,
மயிர் கால்கள் குத்திட்டு நிற்க,
'சிலையாய்' நின்றேன்
கடவுள் என் முன்னே நிற்கிறார்.
********
தினமும் வேண்டுவேன் கடவுளை,
கடவுளே இதை கொடு, அதை கொடு,
உடனே கொடு, சீக்கிரம் கொடு,
இத்தனை நாட்களுக்குள் கொடு,
இத்தனை மாதங்களுக்குள் கொடு,
கொடு, கொடு, கொடு.
கடவுள் 'கேட்டார்'
சரி கேட்டதையெல்லாம் தருகிறேன்
அத்துடன் நீ திருப்தி கொள்வாயா?
செவ்வாய், 22 ஜூன், 2010
புதன், 16 ஜூன், 2010
நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?
நண்பர்களே உங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்,
மேலே உங்களின் ஓட்டுகளை இட்டும், கமெண்ட் வழியாகவும் உங்களின் அனுபவங்களை இந்த வலை தலத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?
நம்பலாம் - இனிய அனுபவம்
நம்பகூடாது - கசப்பான அனுபவம்
ஒரு எல்லைவரை நம்பலாம்
நண்பர்களா, எங்கே அவர்கள்?

சனி, 12 ஜூன், 2010
ஒரு பக்க கதைகள் - 1 - "அம்மா நான் பாசாயிட்டேன்"
ஒரு பக்க கதைகள் - 1
"அம்மா நான் பாசாயிட்டேன்"
குமாருக்கு இதய துடிப்பு அதிகரித்துகொண்டே இருந்தது. அவனுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிவருகின்றன.
இது அவனுடைய வாழ்கையின் போக்கையே மாற்றப்போகும் தினம் என்பது தெளிவாக உணர்ந்திருந்தன். அவனுடன் படித்த நண்பர்கள் வசதியில் உயர்ந்தவர்களாகவும், இன்று தோற்றால் மறுபடி பரீட்சை எழுதி வெற்றி பெற பண பலமும், சுற்றத்தார் உதவியும் நிறைந்தவர்கள். குமாருக்கு அப்படி இல்லை. அவன் வீட்டுக்கு ஒரே பையன், அவன் அப்பாவும் அம்மாவும் அந்த சிறிய கிராமத்தில் விவசாய கூலிகளாக வேலை செய்கிறார்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் மகனை படிக்க வைக்க முயற்சித்து பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். அதுவும் பள்ளி கட்டணம், புத்தகம் எல்லாம் இலவசமாக கிடைப்பதால் ஏதும் பிரச்சினை இல்லாமல் இருந்தது.
ஆனால் விதி ஊரை ஒட்டிய நெடுஞ்சாலையில் புதியதாக திறந்திருக்கும் பெட்ரோல் பங்கினால் வந்தது. அந்த பங்கின் முதலாளி குமார் அப்பா வேலை செய்யும் பண்ணையாருடையது. அவர் உரிமையோடு குமாரின் அப்பாவை கூப்பிட்டு "என்னப்பா உன் பையன் பத்தாவது பரீட்சை எழுதி இருக்கானாமே, எப்படி, தேறுவானா மாட்டானா, எப்படி இருந்தாலும் பரவாயில்லை உன் பையனை என்னோட பெட்ரோல் பங்குல கேசியர் வேலைக்கு போடறேன், உடனே அவன வேலையில போய் சேர சொல்லு" என்றார். குமாரின் அப்பாவுக்கோ அவரின் கட்டளையை மீற முடியாத தர்மசங்கடமான நிலை. குமாரின் அம்மாவிடம் இதை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது குமார் வீட்டினுள் நுழைந்தான். "இங்க பாருங்க, அவன படிக்க வைக்க நாம இது வர ஒன்னும் பெரிய செலவு ஒன்னும் பண்ணதில்ல, அவன் படிக்கணும் என்று ஆசை படறான், அவன் படிச்சு முன்னேறினா நமக்கு தானுங்க பெரும, அதனால அவன் தொடர்ந்து படிக்கட்டும்" என்றார். குமாரின் அப்பாவும் இதற்க்கு ஒத்து கொண்டார் ஒரு நிபந்தனையோடு, பாஸாயிட்டா தொடர்ந்து படிக்கலாம், ஆனா பெயிலாயிட்டா பெட்ரோல் பங்க் வேலைக்கு போகணும் என்று. நண்பன் பேப்பரை கொடுத்து பரீட்சை நம்பரை பார்க்க சொன்னான். "அம்மா நான் பாசாயிட்டேன்" "அம்மா நான் பாசாயிட்டேன்"
டேய் குமார், குமார் என்னடா பகல் கனவு, கஸ்டமர் வந்து இருக்காங்க பாரு, போய் பில்லு போடற வழியை பாரு என்றபடி கல்லாவில் உட்கார்ந்தார் பண்ணையார்.

வியாழன், 10 ஜூன், 2010
பிரார்த்தனையால் வேண்டியதெல்லாம் கிடைத்திடும்
பிரார்த்தனை
பிரார்த்தனையால்
வேண்டியதெல்லாம் கிடைத்திடும்
இறைவனை தொழுதால்,
வேறென்ன வேண்டும் உனக்கு.
நான் இந்த மதம்,
அந்த மதத்து கடவுள், கடவுள் கிடையாது என்றால் எப்படி.
எனக்கு என் தாயை தெரியும்,
உனக்கு உன் தாயை தெரியும், ஆனால்
என் தாய் மட்டும் தான் உயரந்தவள் என்றால் எப்படி
எல்லா தாயும் தன் தாய் போல் ஆகுமா.
ஆனால் தாயுள்ளம் தாயுள்ளம் தான்,
வேறொரு குழந்தை அழுதாலும்
அவள் உள்ளம் உருகிடும்.
வாழ்க்கையில் உனக்கு என்ன வேண்டும் என பட்டியலிடு,
அதை கடவுள் முன் வை நீ கேட்டதெல்லாம் கிடைத்திடும்.
இது என்ன வியாபாரமா வேண்டியதை கடவுள் நமக்கு தர.
இது ஒரு பந்தம்,
பக்தனுக்கும் கடவுளுக்கும்.
நீ எப்படி சூன்யத்திலிருந்து உருவாகி மீண்டும்
சூன்யமாய் மறைவதை நம்புவாய் அல்லவா.
அப்படித்தானே இதையும் நம்பவேண்டும்.
வாழ்க்கை சிறியது, நம்பிக்கை பெரியது.
நம்பிக்கையில் தான் உலகம் சுழல்கிறது.
வாழ்ந்து தான் பார்ப்போம் நம்பிக்கையான பிரார்த்தனையுடன்.

புதன், 9 ஜூன், 2010
குட்டி பூனையும், டிரைவர் ஹீரோவும்
காலை எட்டு மணி, பஸ்சுக்காக காத்திருக்கிறேன். அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டது. சாலையில் வாகனங்கள் கற்றை கிழித்தபடியும், நேரத்தை விரட்டியபடியும் இரண்டுபக்கமும் சென்றுகொண்டிருந்தது. வித விதமான கார்கள், வாகனங்கள், வித விதமான மனிதர்கள் நேரத்துக்கு கட்டுப்பட்ட இயந்திரங்களாய் நேற்று பாதியில் விட்டு வந்த வேலையை தொடர சென்றுகொண்டிருக்கிறார்கள். கதிரவன் தனது சூடான கரங்களால் சுரீர் என்று அறைந்துகொண்டிருந்தான். வெயில் மேலேற தொடங்கிய நேரம். வியர்வை பிசுபிசுப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. என்ன தான் பாடி ஸ்ப்ரே போட்டாலும் அலுவலகம் செல்வதற்குள் நாறிவிடுகிறது, எல்லாம் வெயில் பகவானின் கைங்கர்யம். திடீரென்று வேகமான போக்குவரத்தில் மாற்றம் உண்டானது. 'கிரிச்' 'கிரிச்' என பிரேக் போடுவதும் பின் மெதுவாக நகர்ந்து செல்வதாய் இருந்தன வாகனகள். ஏன் என்ன ஆயிற்று, இங்கு வேக தடை கூட இல்லையே, இந்த சாலையை எப்போதும் சிறப்பாகவே பராமரித்து வருவார்கள், சாலை பழுது என்றுகூட சொல்லமுடியாது. மெல்ல அனைவரின் கவனமும் சாலை மீது விழுந்தது. அதோ, அதோ அங்கே என்ன? இது பூனை குட்டி போலல்லவா இருக்கிறது. அதிசயமாய் உணர்தேன். இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறைந்த இவ்வளவு வேகமான சாலையின் நடுவில் எப்படி இந்த குட்டி பூனை சென்றிருக்க முடியும். யார் கொண்டுவிட்டிருக்க முடியும். புரியாத புதிராய் இருந்தது. கார்கள் நின்றதும் அந்த குட்டி பூனை சாலையை கடக்க அதன் வழக்கமான குணத்தால் பதுக்கி பதுங்கி செல்ல முயன்றது, எங்கே பதுங்க முடியும், இருப்பதோ வாகனங்களின் சக்கரம் மாத்திரமே. வாணலிக்கு பயந்து அடுப்பில் குதித்த கதையாய் சக்கரங்களின் அடியில் பதுங்கிய அந்த பூனை குட்டியை பார்க்க பார்க்க மனம் பதறியது. எப்படியாவது அந்த பூனை குட்டியை காப்பாற்றும் எண்ணத்தோடு வாகனங்களை கடந்து சாலையின் மைய பகுதிக்கு வந்தடந்தேன். டிரைவரிடம் வாகனத்தை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, காரின் அடியில் குனிந்து மெல்ல கைகளால் தூக்கினேன். அய்யோ, இத்தனை சிறிய பூனை குட்டிக்கு இவ்வளவு கோபமா, வாயை அகலமாக திறந்து அதன் கூர்மையான குட்டி பற்களை வெளியில் காட்டியும், கால்களில் புதைந்து கிடந்த நக கத்திகளை வெளியில் காண்பித்தும் கோபமாக சீறியது அந்த குட்டி பூனை. சட்டென்று தூக்கி சாலையின் நடுவில் உள்ள மைய தடுப்பு பாதையில் போட்டேன். அப்பாடா, குட்டி பூனையை காப்பற்றியதில் என் மனம் லேசாகி சந்தோஷ சாரல் தொற்றிகொண்டது.
அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அந்த குட்டி பூனை திடீரென மீண்டும் சாலையை நோக்கி பாய்ந்தது, நானும் சூழ்நிலை மறந்து அதை காப்பாற்ற அதன் பின் ஓடினேன், சிறக், கிரிச், என்ற சத்தங்கள், சாலையில் வாகனகள் திடீர் பிரேக் இட்டதால் வந்தவை. நல்லவேளை பூனை தப்பியது, நானும்தான். திட்ட நினைத்த டிரைவர் பூனைக்குட்டியை கண்டதும், வாயை திறக்கவில்லை. மீண்டும் முயற்சித்தேன், வாகனங்களுக்கு அடியில் ஒளிந்துகொண்ட அந்த பூனை குட்டியை தேடினேன், அது என் கண்களுக்கு புலப்படவில்லை. உடையெல்லாம் வியர்வையால் நனைந்தது. இனி சாலையின் குறுக்கில் நின்றுகொண்டிருந்தால் சரியாக இருக்காது என்று தோன்றியது. சாலையை கடந்து மீண்டும் பஸ் நிறுத்ததிற்கு வந்தேன். அடடா என் பஸ் பறப்பட்டு சென்று கொண்டிருந்தது. போச்சு. இனிமே 20 நிமிடம் கழித்துதான் அடுத்த பேருந்து. இந்த வெயிலில் இன்னும் 20 நிமிடம் கழித்து தான் அடுத்த பஸ். வெயிலின் வீரியம் அதிகரித்துகொண்டிருந்தது.
குட்டி பூனையின் நிலைமை என்னவாயிற்று, மனதில் சிறு வலியுடன் பார்த்தேன். நிறுத்தி, நிறுத்தி சென்றுகொண்டிருந்த டிரைவர்களில் ஒரு நபர் மட்டும் சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு அந்த பூனையை கையில் எடுக்க முயற்சித்தார், முன்போலவே அந்த பூனை சீறிற்று, ஆனால் சற்றும் பயப்படாமல் இரு கைகளாலும் பூனையை திமிரவிடாமல் இறுக்கி பிடித்து தன் வாகனத்தின் பின்புறம் போட்டார். பின்னர் வாகனத்தை மேற்கொண்டு செலுத்த ஆரம்பித்தார் யாரையும் சட்டை செய்யாமல்.
ஒரு உயிரை காப்பாற்றிய அவர் இப்போது என் கண்களுக்கு பெரிய ஹீரோவாக தெரிந்தார். இப்போது நான் என்னை நினைத்துகொண்டேன், பூனை குட்டியை காப்பாற்ற யாரும் துணியாதபோது நான் மட்டும் முயற்சிதேனே, ஆனால் அந்த பூனை குட்டியின் சீற்றத்தால் மீண்டும் காப்பாற்ற முனையாமல் பயந்து திரும்பிவிட்டேனே. கடைசியில் அந்த பூனை குட்டியையும் நான் காப்பாற்றவில்லை, நேரத்திற்கு அலுவலகமும் போகவில்லை.

உதவி செய்வதற்கு ஈரமனம் மட்டும் போதாது, தைரியமும் வேண்டுமோ.
அந்த டிரைவர் ஹீரோ தானே.
செவ்வாய், 8 ஜூன், 2010
தங்களின் தன்னம்பிக்கை முன்பை விட இப்பொழுது அதிகரித்திருகிறதா?- ஓட்டெடுப்பில் முடிவுகள்
தங்களின் தன்னம்பிக்கை தற்போது உயர்ந்து இருக்கிறதா? என்கிற ஓட்டெடுப்பில் கீழ் கண்ட முடிவகள் அறிவிக்கபடுகிறது.
முடிவுகள்
மொத்தம் வாக்களித்தவர்கள் 15.
தங்களின் தன்னம்பிக்கை முன்பை விட இப்பொழுது அதிகரித்திருகிறதா?
ஆம் 10 (66%)
இல்லை 2 (13%)
மிக குறைவாக 0 (0%)
மிக அதிகமாக 3 (20%)
பெரும்பான்மையாக தன்னம்பிக்கை உயர்ந்துள்ளதாக வாக்களிக்கபட்டுள்ளது.
2 வாசக அன்பர்கள் இல்லை என வாக்களித்துள்ளனர். அவர்களின் தன்னம்பிக்கை உயரவும், இவ்வாறு வாக்களிக்க காரணமான அவர்களின் மனதில் உள்ள காயம் அல்லது தாழ்மை உணர்ச்சி மாறி அவர்களும் அடுத்த முறை தன்னம்பிக்கையோடு வாக்களிக்க இறைவனிடம் அவர்களுக்காக வேண்டுவோம்.
ஓட்டெடுப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

ஞாயிறு, 6 ஜூன், 2010
கண்'நீர்' ரத்தம்
கண்'நீர்' ரத்தம்
உதட்டிலே முகமுடி சிரிப்பு
கண்களிலே பூட்டிய நெருப்பு
இது சமூகம் தனை எதிர்கொள்ள.
உள்ளத்திலே காயம் பட்டது
அது உனக்கு தெரிய நியாயம் இல்லை.
உனக்கு கண்களும் இல்லை, இதயமும் இல்லை.
ரத்தம் வழிந்ததே என் கண்களில்,
அதை வெறும் கண்'நீர்' என்று நினைத்தாயோ.
வார்த்தை அம்பு எய்ததால் வந்த காயம் மாறும்
******
சனி, 5 ஜூன், 2010
ஆங்கில எழுத்துல ஒரு எழுத்த காணோமாம்
ஆங்கில எழுத்துகள் 25 -ஆ அல்லது 26-ஆ.
சின்ன கொழந்தைய கேட்டாலும் சொல்லிடும் 26 என்று. ஆனா இப்ப 25 தான்
இந்த உலகத்துல எது நடக்கும்! எது நடக்காது! என்று எவராலுமே கணிக்க முடியாது.
அதுக்கு உதாரணம் இதுவும் ஒண்ணு. ஆரம்பத்துல கேள்விப்படும்போது என்னால் சிறிதும் நம்ப முடியவில்லை.
ஏன் உங்களாலும் நம்பமுடியாது?
நாம சின்ன வயசிலேருந்து அ-ன ஆவன்ன படிச்சுட்டு உபயோக படித்திகிட்டும் வரோம். திடிருன்னு அதுல ஒரு எழுத்த இனிமே எடுத்துட போறம், இனிமே அந்த எழுத்தை உபயோக படுத்தாம அதுக்கு பதிலா அதே சத்தம் வர்ற வேறொரு எழுத்த உபயோக படுத்திக்கங்க அப்படின்னு ஒரு பொது அறிவிப்பு வந்தா எப்படி நம்ப முடியும்.
ஆனா அறிவிப்பு வந்தது இங்கிருந்து இல்லே, இங்கிலீஷ் பேசும் நாட்டிலிருந்து. (அப்பாடா தப்பிச்சோம்)
என்ன தெரியுமா, இனிமே ஆங்கில எழுத்துகளில் கடைசியில் இருக்கும் "Z" ஐ உபயோக படுத்த வேணாம், அதுக்கு பதிலா இப்படி பயன்படுத்துங்கன்னு சொல்லி இருக்காங்க, என்ன சொல்லி இருக்காங்கனு கீழ இங்கிலிஷ்ல படிச்சுக்கங்க
Surprising as it sounds, it looks like the English alphabet will be losing one of its letters on June 1st. The announcement came from the English Language Central Commission (ELCC).
Here is a quote from the press release:
After carefully considering and debating the matter for over two years, the ELCC came to the conclusion that the letter “Z” should be removed from the English alphabet. The main objective of this change is to simplify the phonetic aspect of the language, and to unify the American and British spellings.
What will happen to the words that have the letter “z” in them? It depends on the word. According to the ELCC, words that started with a “z” will now start with an “x”. Examples include:
· zero becomes xero
· zoo becomes xoo
· zone becomes xone
· zodiac becomes xodiac
Words that featured a “z” with the “s” sound, on the other hand, will now be officially written with the “s” (i.e., unifying the American and British spelling). Examples include:
· visualize becomes visualise
· analyze becomes analyse
· materialize becomes materialise
Source: http://www.dailywritingtips.com/the-letter-z-will-be-removed-from-the-english-alphabet
என்னத்த சொல்ல, போக போக ஏன் எழுத்தெல்லாம், இனி எல்லாரும் கை, கண் சைகைலேயே பேசிக்கங்கனு சொல்லிடுவங்களோ?
ஆனா உண்மையிலேயே இது ஏப்ரல் ஃபூல் தானாம்
நம்பளையே குறி வெச்சி கொலை வெறியோட தாக்குராங்கப்பா,
யார நம்பரதுனே தெரியல்ல.
உண்மை தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லுங்கப்பா.

புதன், 2 ஜூன், 2010
பணவீக்கம் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா நண்பர்களே?
பணவீக்கம் (money inflation)
இந்திய பொருளாதாரம்
இந்திய பணவீக்கம் மார்ச் 2010 முடிவில் 14.86 சதமாக உயர்ந்திருக்கிறது, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமே அதற்கு காரணம் என்றெல்லாம் படித்திருப்பீர்கள் அல்லது கேள்வியாவது பட்டிருப்பீர்கள்.
இந்திய பணவீக்கம் மார்ச் 2010 முடிவில் 14.86 சதமாக உயர்ந்திருக்கிறது, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமே அதற்கு காரணம் என்றெல்லாம் படித்திருப்பீர்கள் அல்லது கேள்வியாவது பட்டிருப்பீர்கள்.
பணவீக்கம், பணவீக்கம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா நண்பர்களே, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பணவீக்கத்தை கணக்கிட இரண்டு முறைகள் பின்பற்றபடுகின்றன,
1 . மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் ( Wholesale Price Index Inflation - சுருக்கமா WPI)
2 . நுகர்வோர் விலை பட்டியல் பணவீக்கம் (Consumer Price Index Inflation - சுருக்கமா CPI)
நமது இந்தியாவில் மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் (WPI) முறையை உபயோகபடுத்துகின்றனர்.
வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலை பட்டியல் பணவீக்கம் (CPI) முறையை பயன்படுத்துகின்றனர்.
WPI முறை 1902 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இம்முறையே பல பொருளாதார வல்லுனர்கள் மற்றும் துறை வல்லுனர்களின் முயற்சியால் 1970 ஆம் ஆண்டு மேலைநாடுகளில் மாற்றப்பட்டு அங்கு உபயோகத்தில் உள்ளது.
WPI முறையில் பொருட்கள் / சரக்குகள் மொத்த விலை சந்தையில் விற்கப்படும்போது ஏற்படும் ஏற்ற-இறக்க விலை மாற்றத்தால் பணவீக்கம் நிர்ணயக்கபடுகிறது.
இந்தியாவில் மொத்தம் 435 பொருட்கள் WPI முறைக்கு கணக்கில் எடுத்துகொள்ளபடுகிறது.
வாரந்தோறும் வெளியிடப்படும் பணவீக்க விகிதம் இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்பைடயில் தான் என்று தெரியுமா!
இனி பணவீக்கம் எப்படி கணகிடுகின்றனர் என்று பார்ப்போமா?
உதாரணத்துக்கு,
2001 இல் சர்கரையின் விலை ருபாய் 40 ,
2010 இல் சர்கரையின் விலை ருபாய் 60 என கொள்வோம்.
2010 இல் மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் ( Wholesale Price Index Inflation - WPI) எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள பின்வரும் கணக்கினை இடுவோம்
( சர்க்கரை விலை 2010 இல் - சர்க்கரை விலை 2001 இல்) / சர்க்கரை விலை 2001 இல் x 100 ),
அதாவது
( Rs.60 - Rs.40) / Rs.40 x 100 = 50 % ஆகா உயர்ந்திருக்கிறது (உதாரணதிற்கு விலை கொடுத்துள்ளேன், சந்தை நிலவரம் அறிக).
இதை போலவே மற்ற 434 பொருட்களுக்கும் கணக்கிடப்பட்டு மொத்த சதவிகிதமும் வகுக்கப்பட்டு அரசால் வெளியிடப்படுகிறது.
தங்களின் தன்னம்பிக்கை தற்போது உயர்ந்து இருக்கிறதா?
தங்களின் தன்னம்பிக்கை தற்போது உயர்ந்து இருக்கிறதா?
மேலே சர்வேயில் தன்னம்பிக்கையுடன், சிந்தித்து வாக்களியுங்கள்.
மேலே சர்வேயில் தன்னம்பிக்கையுடன், சிந்தித்து வாக்களியுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)