புதன், 26 மே, 2010

கை 'கொடுக்குக்' கை



பழைய கதை

பகலும் இரவும் கலக்கும் அந்தி மாலை நேரம்

குருவின் நிழல்  பின்புரமாய் சரிய, 
தள்ளிவிட்ட மகிழ்ச்சியில் வீழும் சூரியன்!

மாலை தென்றலும் ஆற்றங்கரை குளிரும்

நிழல் அது கால் தட்டாமல்
அறிவு பசியுடன் சிஷ்யன் பின் தொடர,

குருவின் சிந்தனை கலைந்தது.
பார்வை கூர்மை கொண்டது, மனமோ ஈரம் நிறைந்தது.

ஆற்றினிலே ஒரு தேள் தத்தளித்தது,
உயிர் தக்க கொந்தளித்தது.

கைகொண்டு தூக்கினார் வெடுக்கென்று கொட்டிற்று,
அது அதன் குணம்,

மீண்டும் மீண்டும் முயற்சி,

இது மனித மனம்.

முயற்சி தான் மெய் வருத்த கூலி தந்தது,
அச்சிறு உயிரும் கரை நடந்தது

புரியா சிறுவன் பணிந்தான் குருவினை,

குரு இதழ் விரிந்தார்
அதன் குணம் மாறா
இது என் குணம்,

இதுவே!
கடவுள் மனிதனை ஆறறிவுடன் படைத்ததின் சாட்சி.

புதிய கதை

வசந்தகள் ஓடின, பழையது கழிந்தது
புதியன பிறந்தன, சிஷ்யன் குருவானான்

அதே ஆற்றங்கரை, உடன் புதிய சிஷ்யர்கள்,
வேறொரு தேள் வழக்கம்போல் தத்தளித்தபடி தண்ணீரில்,

குருவும் முன்றார் கைகொண்டு காப்பாற்றிட
கொடு நஞ்சு தேளும் கொட்டிற்று முனையும் போதெல்லாம்

கடைசியில் மனம் தளரா குரு
முழு முயற்சியின் பலனாய் கரை சேர்த்தார் வலியோடு,

புதிய சிஷ்யர்கள் பணிந்து புரிய முற்படு முன்
முந்திகொண்டது அந்த விஷ தேள்,

வார்த்தைகளில் விஷமும், பேச்சாலும் கொட்டியது,
"தெளிவாய் தான் உள்ளீரா".
("இன்னும் அறிவு வரலியா")

சனி, 22 மே, 2010

இந்திய விமான விபத்து / அஞ்சலி

தங்களது குடும்ப உறுப்பினர்களுக்காக துபாயில் பொருள் ஈட்டி
குடும்பத்தை காக்க நினைத்து வருட முடிவில், விடுமுறையில்,
அந்த குடும்ப உறுப்பினர்களை காண, ஆவலுடன் இன்று
அதிகாலையில் உறக்கத்தை மறந்த விழிகளுடன் காத்திருந்து
கொடிய கடைசி நிமிட ஏக்கங்களுடன்  உயிர்  நீத்த  என் அன்பு இந்திய நண்பர்களே உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன், உங்களின் குடும்பத்தாரின்  துயரில் பங்கெடுக்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவா, உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு நிம்மதியை கொடு.
அவர் தம் குடும்பத்தாரை உடன் நின்று காப்பாற்று.

திங்கள், 17 மே, 2010

வார்த்தை வரம்

வார்த்தை வரம்

இது வார்த்தைகள் இல்லா புதிய உலகம்
வார்த்தை வரம் வாங்கினேன், இறைவனிடம்.
அறிமுக முயற்சியாய் கடவுள் பணித்தார்,
மூன்று வார்த்தைகள் தோன்றும்
கவனமாய் உபயோகி
அதன் பின் உன்னை கண்டேன்
என் உதடுகள் தானாக முணுமுணுத்தது
(1) அடடா (2) என்ன (3) அழகு
புதிய வார்த்தைகள் இல்லை என்னிடம்
என் காதலை சொல்ல.

கதை : "அந்த இரண்டு நிமிடம்"

"அந்த இரண்டு நிமிடம்"  கதை



                                   சார், சார், கொஞ்சம் எழுந்திருங்க நான் இறங்கனும் என்று அந்த இளைஞன்   எழுப்பியதும் "நான்" எழுந்தேன். அட நல்லா  தூங்கிட்டேன் போல இருக்கு என்று சொல்லியபடி எழுந்து அவன் இறங்க வழி விட்டு நின்றேன். அந்த இளைஞன்  நான் பஸ்ஸில் ஏறும் முன்னே அந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன், நான் உட்காரும் போது சிறிதளவு நகர்ந்து நான் உட்காரும் அளவிற்கு இடம் கொடுப்பன் என நினைத்து ஏமாந்து போனேன். அவன் என்னை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இந்த காலத்து பசங்களே இப்படித்தான் பெரியவங்களுக்கு மரியாதையே கொடுக்க தெரியாது, அன்பு என்றால் காதல் மட்டும்தான்னு நினைக்கிறாங்க. இந்த இளைஞர்கள்  தான் இப்படி என்றால், அதோ நிக்கிறாரே அந்த மனிதர், என் வயது தான் இருக்கும், இந்த இருக்கை காலி ஆகும்போது மூன்று இருக்கை தள்ளி நின்றவர் என்னை தாண்டி இருக்கையை பிடிக்க முயன்றவர் நான் சட்டென உட்கார்ந்ததும் ஏமாந்ததாக உணர்ந்து என்னை மனதிற்குள் திட்டியபடி நகர்ந்து சென்றவர் தானே. தனக்கு ஒரு சட்டம், மத்தவங்களுக்கு ஒரு சட்டம். கேட்டா இருக்கையை தந்திருப்பேனே, அவரின் சுயநலத்துக்கு நான் ஏன் அடிபநியனும். நான் கண்டிப்பா பாதுகாப்பா உட்காரனும், என் கையில் உள்ள பையில் ரொக்கமாக சில லட்சங்கள் உள்ளது, என் நண்பனின் மகளுக்கு கல்யாணமாம், என்னிடம் கேட்டான், என் மகளின் கல்யாணத்திற்காக உபரியாக சேர்த்த பணத்தை கொடுப்பதென்று முடிவு செய்து மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டு நண்பனை திடீர் சந்தோஷத்திற்கு உள்ளாக்க செல்கிறேன்.

சார், சார், எழுந்திருங்க ........

எனக்கு எரிச்சலாக இருந்தது, என்ன ஆச்சு இந்த பையனுக்கு, யார் கிட்ட பேசறான், நான் தான் இருக்கையிலேருந்து எழுந்து நின்று வழி விடுகிறேனே, ஆனால் மறுபடியும், மறுபடியும் சொன்னதையே சொல்கிறானே என்று நினைத்தபடி அவனை பார்த்தேன்.

அட! யார் இது இங்கு உட்கார்ந்து இருப்பது, என்னை போலவே இருக்கிறாரே, அட "அது" நான்தான். இது எப்படி சாத்தியம், "நான்" இங்கு நிற்கும்போதே அங்கு எப்படி உட்கார்ந்து இருக்க முடியும், யோசிக்க, யோசிக்க உண்மை சுட ஆரம்பித்தது. பஸ்ஸில் உள்ள ஜனங்களும் என் இருக்கை அருகே "என்னை" தள்ளியபடி குழும்பினர்.

என்னாச்சுப்பா? நம்மோட 'உசுர' எடுக்கரதுக்கே வராங்க! வழி விடுங்கப்பா காத்து வரட்டும், என்ன ஆச்சுன்னு பாருப்பா, உயிர் இருக்கா, ஆம்புலன்ச கூப்டுப்பா இப்ப தான் போன் பண்ணி வைக்குரதுகுள்ளே வந்துடுதே, என வித விதமான வார்த்தைகள், சத்தங்கள் கேட்டது. அவர்களின் குரலில் ஒரு அவசரமும், எரிச்சலும் சேர்ந்து கலவையாய் ஒலித்தது.

        என் பெயர் சுந்தரேசன், வயசு 54 முடிந்து இரண்டு மாதம் ஆகிறது. மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. மூத்த மகளுக்கு கல்யாணம் ஆகி தாத்தா என்று கூப்பிட ஒரு பெண் குழந்தையும் பெற்று சென்ற மாதம் தான் என் வீட்டிலிருந்து அவளின் மாமியார் வீட்டுக்கு போனாள். மகனோ இன்ஜினியரிங் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிறான். மனைவி, நான் என்ன சொன்னாலும் புன்சிரிப்புடன் தலையாட்டிவிட்டு, அதில் ஏதேனும் தவறு இருந்தால் நல்ல மூடில் இருக்கும் போது என் மனம் நோகாமல் எடுத்து சொல்வாள். நண்பார்கள் எப்போதும் போல இன்றும் இளமையுடன் உள்ளது போல "டா" போட்டு பேசும் இனியவர்கள்.

                     இன்னும் எனக்கு எதாவது கடமைகள் உள்ளதா, "மனம்" எண்ணிற்று. மகளுக்கு கல்யாணம் செய்தாகிவிட்டது, நல்ல குடும்பம், நல்ல மாப்பிள்ளை (வரதட்சனை எல்லாம் வேணாம் மாமா!), நல்ல மாமியார் (அவ மருமக இல்ல, எனக்கு பொண்ணு இல்லாத கொறைய தீர்க்க வந்தவ) என நன்றாக இருக்கிறாள். மகனுக்கு கல்லூரியில் கடைசி வருடத்திற்கான முழு கட்டணத்தையும் கட்டியாச்சு, இனிமே கல்லூரியை முடித்து நல்ல வேலையில் சேர்ந்து அவன் பொழச்சுக்குவான். வங்கியில் கொஞ்சம் ரொக்கம் உள்ளது. மனைவிக்கு போதுமான அளவுக்கு நகைகள் உண்டு, வீட்டுக்கு தேவையான அத்தனையும் உண்டு. சில வருடங்களுக்கு முன் நண்பர்கள் சொன்னார்களே என்று அவர்களுடன் சேர்ந்து புறநகரில் வாங்கிய நிலத்தின் மதிப்பு இப்போ பல மடங்கு உயர்ந்து இருக்கு. வேறு என்ன வேண்டும், வேறு என்ன கடமை உள்ளது.

              மனதிற்குள் நெருப்பை பற்றவைத்து போல் தகித்தது. ஏதோ ஒரு குறை உள்ளது அது என்ன, என்ன என்று யோசித்தது. மனம் சட்டென விழித்தது, நினைவு வந்துவிட்டது.

              என் மனைவி என்னிடம் இது வேண்டும், அது வேண்டும் என எதையும் இந்த 25 வருடத்தில் கேட்டதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு நாள் "என்னங்க நான் உங்க கிட்ட ஒண்ணு கேட்பேன், மறுக்காம நிறைவேத்தனும் என்ன?" என்று பீடிகை போட்டாள். நானும் மனம் பதைக்க அடடா இவளுக்கு ஏதோ குறை வச்சுட்டோம் போல, அதனால் இவ கேக்கிறதா எப்படியாவது நிறைவேத்தனும் என்று மனதில் முடிவு செய்தவனாக, "சொல்லும்மா, என்ன வேணும் உனக்கு" என்றேன். "எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசைங்க, என் வாழ்க்கை முடியறதுக்குள்ளே எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும், போய் வந்துடனும், தயவு செய்து ஏற்பாடு பண்றீங்களா" என்று அவள் ஏக்கத்துடன் கேட்டது என்னை கரைய வைத்தது, "என்னம்மா இது, இதுக்கு போயா இத்தனை தயக்கம், எனக்கும் இந்த ஆச இருந்தது, ஆனா பயண அலைச்சல் உனக்கு ஒத்துக்கதே என்ற நினைப்பில் உன்கிட்ட சொல்லல, அதுக்கென்ன தாராளமா இந்த வருடத்திலேயே போகலாம்" என்று கூறி முடிக்கும் போது என் கண்கள் கண்ணீரால் நிறைந்து இருந்தது, அவளின் எண்ணமும் என் எண்ணத்தையே ஒத்திருப்பை நினைத்து.

        கடவுளே, அவளுக்கு கொடுத்த வாக்கை எப்படி காப்பாற்ற போறேன், எப்படி நடக்கும் என பல்வேறு மன குழப்பத்தால் என் "மனம்" வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

                         மேலும் சப்தங்கள் பெரிதாகிகொண்டே போனது, அந்த வாலிபன் மற்றவர்களை பார்த்து, ஒரு கை பிடிங்க, பஸ்சுல கடைசில இருக்கிற நீளமான் சீட்ல படுக்க வைக்கலாம் என்றான். பயணிகளில் ஒரு சிலர் மனம் வந்தும், வராமலும் 'என்னை' தூக்கி அந்த கடைசி சீட்டில் படுக்க வைத்தனர். அந்த வாலிபன் தான் இரண்டு கைகளையும் சேர்த்து என் நெஞ்சில் வைத்து மிதமான வேகத்தில் விட்டு விட்டு அழுத்த தொடங்கினான்.

                   இந்த ஜனங்களே இப்படி தான், வேடிக்கை பாக்கறதுன்னா போதும் கூட்டம் சேர்ந்துடுவாங்க, நெருக்கி அடிச்சி முன்னாடி வந்து பார்க்க துடிப்பங்க, யாரோ சிலர் பின்னாலிருந்து தள்ளினார்கள், என் நெஞ்சு முன்னால் உள்ள கம்பியில் மோத......

                            லொக்... லொக்.... இருமல் தொண்டையிலுருந்து எழுந்து அடைபட்டிறிந்த கற்றை வெளியிடவும், உட்செல்லவும் அனுமதித்தது.

சார், சார், எழுந்திருங்க என அந்த இளைஞன்  உலுக்கினான்,

மெதுவாக கண்திறந்தேன், சுற்றிலும் உள்ள 'மனிதர்களை' பார்த்தேன். மெதுவாக எழுந்து உட்கார்ந்ததும் அந்த இளைஜன் யாரிடமோ வாங்கிய தண்ணீரை குடிக்க கொடுத்தான். "சார், இலவச ஆம்புலன்ஸ் கிழே நிக்குது, எதுக்கும் மருத்துவமனைக்கு  போய் டாக்டர் கிட்ட ஒரு செக்-அப் பண்ணிக்குங்க, எப்பவோ  பள்ளியில் சொல்லிகொடுத்த முதலுதவி பாடம் இப்ப உதவி இருக்கு" என்று சொல்லியபடி என்னை கை தாங்கலாக அருகே நின்றிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிவிட்டான். சார், சார், என்றபடி ஓடி வந்த இருக்கையை பிடிக்கமுடியாமல் ஏமாந்து போன நபர், "சார், உங்க பை" என அந்த பணப்பையை என்னிடம் நீட்டினார்.

                             அவசர ஊர்தி மெதுவாக நகர தொடங்கியது, மனம் அந்த இளைஞ்சனை வாழ்த்தியபடியும்,   அறிமுகமில்லாமல் உதவிய உள்ளங்களை நோக்கி என் கரங்கள் தானாக குவிந்து உயர்ந்து அவர்களுக்கு என் நீர் தளும்பிய கண்களால் நன்றி சொன்னேன் .

 

திங்கள், 10 மே, 2010

என் மகள்

என் பாசமிகு மகளே,
என் வெற்றிடத்தை நிரப்ப வந்த பாசக் காற்று நீ,
வாழை அடி  வாழையாய் என் குலம் தழைக்க வந்தவளே
நீ வாழிய பல்லாண்டு நம் குலம் தழைக்க.
வாழைகன்றே  நான் இட்டிருப்பது அன்பு வேலி
உன்னை எந்த பிரச்சனைகளும் தீண்டாமலிருக்க.
என் கண்ணிமையில் உன்னை மூடி காக்க நினைக்கிறன்
நீயோ கண்ணுக்கெட்டாத  தூரத்தில் உன் தாயுடன்.
இது தான்
கடலோடியும் திரவியம் தேட வந்ததின் விலை.

வியாழன், 6 மே, 2010

பார்த்ததில்/படித்ததில்/கேட்டதில் ரசித்தது

படித்ததில்/ பார்த்ததில்/கேட்டதில் பிடித்தது

இப்போ மணி இரண்டு மணி 2.45 விடியற்காலை,

தமிழ் இனிமை, வார்த்தை, அருமை காரணமாக, விடிய விடிய தமிழ் பற்றி
விவாதித்து, தமிழ் இனிமை காரணமாக,
 தூக்கம் மறந்தோம்
எந்தனையோ கருத்துகள் இடை இடையோ வந்தலூம்,
 சில உடனடியாக பத்வேற்ற thondriyathu  (மற்றவை பின்பு பதிவேற்றுகிர்றேன்)
(நண்பரை வேண்டி மறு முறை கூறுமாறு பணிவன்புடன் கேட்டு இங்கு பதிகிறேன்) 

குங்குமம்

ஜாதிக்கு ஜாதி,
மதத்துக்கு மதம்,
பெண்ணுக்கு பெண்,
பாகுபாடு பார்க்கும்
"படுபாவி நீ".

( குங்குமம்,  ஒவ்வொரு சாதிக்கும், மதத்துக்கும், விதவைக்கும், சுமங்கலி பெண்ணுக்கும், வேறு விதமாக தோன்றுவதை இவர் கூறுவதை தூங்காமல் கேட்பதை தவிர வேறு வழிஇல்லை)

கருத்தை பகிர்க கமேன்டிலே.

பார்த்ததில்/படித்ததில்/கேட்டதில் ரசித்தது

புதன், 5 மே, 2010

நம்பிக்கையே வெற்றி

கொட்டிவிட துடிக்கிறேன்,  வார்த்தைகள் இல்லை என்னிடம்,
முடிந்த வரை நிரப்புகிறேன் வார்த்தைகளை இட்டு.
உழைப்பு ஒன்று தானே உன்னிடம் "மூலதனம்"
நம்பிக்கை ஒன்றே "வாழ்க்கை வரம்"
வாழ்க்கையில் முன்னேற "உழைப்பை நம்பு"
நம்பிக்கையே முன்னேற்றும் சமுகத்தில் இன்று.
நல்லதும் கெட்டதும் கலந்ததே சமூகம்,
சமூகமே நீ தானே, உனக்கு  எது தேவை நீ முடிவு செய்.
வெற்றி என்பது உன் காலடி நிழலே
உயர்ந்து நில்,
நிழல் பெரிதாகும்
வெற்றி உனதாகும்.

(கறுத்த சொன்னா நல்லாருக்கும்)

பஞ்ச பூதத்துல எந்த பூதம் நல்ல பூதம்

மனிதர்களில் பஞ்ச பூதத்தை காண முடியும்,  உதரணமா "அந்த ஆள பாருங்க காத்தா ஓடறான் (காற்று), அவள்  கிட்ட கூட நெருங்க முடியாது அவ நெருப்பு மாதிரி (நெருப்பு), அவனுக்கு வானம் போல மனசுப்பா (வானம்),    அந்த குழந்தை நல்ல நிலம் போல எத, விதைத்தாலும் வளரும் (நிலம்), பாசத்துக்கு அவன் தண்ணி மாதிரி உருகிவிடுவான் (நீர்)" என்று பல்வேறு மேற்கோள் காட்டி பேசறத பார்த்து இருப்பீங்க. அதனால இந்த பஞ்ச பூதங்களில் எந்த பூதம் எல்லாருக்கும் ஒத்து வரும் என பார்க்கலாமா? (பூதம் பூதம்னு ஒரு உருவகத்துக்கு சொல்கிறேன்)
பொதுவா ஒரு பூதம் மற்றொரு பூதமா ஆகாது அல்லது முடியாது, சில நேரம் அது வேறொரு பூதமா மாற வாய்ப்பு உள்ளது. 
நெருப்பு - இது கல்லா, காத்தா, தண்ணியா மாற முடியாது.
நிலம்  - இது நெருப்பா,  காத்தா, தண்ணியா மாற முடியாது.
ஆகாயம் - இது கல்லா, காத்தா, நெருப்பா, தண்ணியா மாற முடியாது.
காற்று - இது கல்லா, நெருப்பா, தண்ணியா மாற முடியாது.

ஆனால், நீர் மட்டும் கல்லா, நெருப்பா, தண்ணியா, ஆகயமா மாற முடியும்.
எப்படின்னு பாக்கலாமா,
1 .  நீர நல்ல குளிர வச்சா ஐஸ் ஆகா மாறிடும் - கல்லு மாதிரி - நிலம்.
2 . நீர நல்லா கொதிக்கவச்சா சூட ஆய்டும் - நெருப்பு மாதிரி  - நெருப்பு.
3 . கொதிக்க வைக்க வைக்க அது ஆவியா மாறி காற்றுல மற்றும்  ஆகயதுல கலந்திடும் - காற்று  & ஆகாயம்.

மேலும் நீரால் மட்டுமே அதனுடன் சேரும் உருவத்தை, நிறத்தை பெற முடியும்,
மனித மனமும் நீரைப்போல தான், அதுல எப்பவும் எண்ண அலை ஓடிகிட்டே இருக்கும், பிரச்சினைக்கு ஏற்ப நிறம் மாறும், கோபத்துல கொதிக்கும், மன உறுதியில கல்லாகும், எப்படி எவ்வளவோ சொல்லலாம்.

உங்களோட கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளவும். எந்த பூதம் சிறந்த பூதம்.


செவ்வாய், 4 மே, 2010

படித்தேன்/பார்த்தேன் ரசித்தேன்

எனது அலுவலக பணி காரணமாக ஒரு புதிய என்னை விட வயதில் குறைந்த வேற்று மொழி பேசும் நண்பர் கிடைத்தார். அவரின் சுறுசுறுப்பு, மற்றவர்களிடம் பழகும் குணம் என்னை வெகுவாக கவர்ந்தது. அது அவர்க்கு இயல்பிலேயே வந்ததா அல்லது அவர் எதிரே ஒட்டி வைத்து இருந்த வாசகத்தில் உள்ளபடி அவர் நடக்கிறாரா என்ற எண்ணம் வந்தது. எனக்கு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.

அந்த ஆங்கில வாசகத்தை அப்படியே மொழி பெயர்த்து தருகிறேன் நீங்களும் இதன் சிறப்பை உணர்வீர்கள், இதோ

"நான் கற்றுகொண்டது என்னவெனில்,

மனிதர்கள் மறக்ககூடும் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று,

மனிதர்கள் மறக்ககூடும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று

ஆனால்

மனிதர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள் நீங்கள் அவர்களின் மனதை எப்படி பாதிதீர்கள் என்று.

மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடதீர்கள்

ஏனெனில் நீங்கள் அந்த விளையாட்டில் வெள்ளகூடும்

ஆனால்

நீங்கள் அந்த மனிதரை இழக்கக்கூடும் 'என்றென்றும்' .

ஞாயிறு, 2 மே, 2010

சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே

பிரதீஷ்... பிரதீஷ்... எழுந்துருடா, எவ்வளவு நேரமா எழுப்புறது, மணி ஏழே கால் ஆகுது காலேசுக்கு நேரம் அவளியா சீக்கிரமா எழுந்து கிளம்புற வழிய பாரு. புரண்டு படுத்தான் பிரதீஷ். ச்சே ! இந்த அப்பாவுக்கு வேற வேலையே கிடையாது இன்னும் எழுந்துகொள்ளவில்லை என்றால் அவ்வளவு தான் காலையிலேய அப்பா கிட்ட இருந்து நல்ல வாங்கி கட்டிக்கவேண்டியது தான் என்று முணுமுணுத்தபடியே எழுந்தான்.
அம்மா சீக்கிரம் டிபன் வை லேட்டவுது என்றபடி தலை வாரி அதை கலைத்து கொண்டான். இப்ப ஏன்டா கத்தறே, அதுக்கு காலையிலேயே சீக்கிரம் எழுந்து கிளம்பனும் அத விட்டுட்டு இப்ப பறக்கிறே என்றபடி டிபனை வைத்தார் அம்மா. என் சீக்கிரமா பறக்கிறேனா இப்ப தான் எல்லா கல்லூரி பெண்களும் வர நேரம் என மனிதில் நினைத்தபடி வேகமாய் சாப்பிட்டான்.
தெருவில் இறங்கி நாலு வீடு தண்டி சென்றதும் இவனை பார்த்துவிட்டு எப்போதோ தயாராகி இருந்த நண்பன் சேகர் "இன்னைக்கும் லேட்டாடா" என்றபடி சேர்ந்துகொண்டான்.
பஸ் ஸ்டாண்டில் இவனை ஒத்த மாணவர்கள் நின்றுகொண்டு பஸ்ஸை எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்தார்கள்.
கல்லூரியை அடைந்து வகுப்புகளை ஒப்பேற்றி அல்லது தூங்கி வழிந்து, நண்பர்களை கிண்டல் செய்து மாலையில் பேருந்தை பிடித்து வழக்கம் போல் படியில் தொங்கிக்கொண்டே வந்தான் பிரதீஷ். திடீரெண்டு தான் கவனித்தான், இதற்க்கு முன் இப்படி ஆனதில்லை, எத்தனையோ பெண்களை கண்டிருக்கிறான் ஆனால் இப்படி மனதை பறிக்கும் படியான அழகை கண்டதில்லை. நடத்துனர் இருக்கைக்கு அருகே நின்று கொண்டிருந்த அவளை அருகில் சென்று காண மனம் துடித்தது. மேலும் இரண்டு படிக்கட்டுகளை ஏறி நடத்துனர் பக்கத்தில் நின்றான். அவள் பார்க்க மாட்டல என்ற எண்ணம் மேலோங்க அவளையே எவ்வளவு நேரம்தான் பார்த்துகொண்டு இருந்தான் என்று தெரியவில்லை, "டே இறங்குடா போதும், ஸ்டாப்பிங் வந்துடுச்சு" என்று சேகர் உலுக்கிய பிறகே அவன் நிதானத்துக்கு வந்தான். சட்டென கிழே இறங்கியவன் அவளை ஜன்னல் வழியே பார்க்க முயற்சிதான். ஆனால் அவள் அங்கு இல்லாததை கண்டு மனம் நொந்தான். சட்டென்று அவள் இறங்கி அவனை கடந்து சென்ற அவள் செல்லும்முன் அவனை ஒரு பார்வை பார்த்து சிறிய புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு சென்றால். இவனுக்கு உலகமே சிறிய கால் பந்து போன்று தோன்றியது.
என்னடா அவளையே பார்த்து கிட்டு இருக்க, அவல உனக்கு தெரியாதா, அவ நம்ப தெருவுல தான் இருக்கா, நம்ப ரூட்டுல தான் தினமும் வருவா. நம்ப குரூப் தான் , இப்ப பிரஸ்ட் இயர் படிக்கிறாள் என்று சேகர் அவளை பத்தி முழு தகவலையும் சொல்லி முடித்தான். மச்சான் ப்ளீஸ் அவள் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குடா, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா என்றான். பிரதீஷ் உண்மையிலேயே உனக்கு அவல புடிச்சுருக்கா அப்போ நான் சொல்றபடி செய் என்று தனக்கு தெரிந்தவற்றை விவரித்தான் சேகர்.
மணி ஐந்து முப்பது அலாரம் அடித்து வீட்டை எழுப்பியது.
யார் இவ்வளவு சீக்கிரம் எழுந்துகறது என்று கூறியபடியே எழுந்த அப்பாவிற்கு தன் கண்களை நம்ப முடியாமல் முழித்தார். அங்கு "அம்மா இன்னைக்கு நான் பால் வாங்க போறேன்" என்று கூறியபடி அம்மாவிடம் பால் கார்டையும் பையும் பிடிங்கிகொண்டிருந்தன் பிரதீஷ். அவ தினமும் காலைல பால் வாங்க வருவா என்று சேகர் கூறியது மனதுக்குள் ஒலித்தது.


சனி, 1 மே, 2010

காதலா, காமமா - என் கவுஜ

பேதை குரங்கு மனம்
பெண் அவளை கண்டுவிட்டால்
கள்ளுண்ட மனம் போல்
காண களித்தாடி
காம வெறி கூடி
களி நடம் புரியுதடா
மாண்பு தனை மறக்குதடா

வலைப் பூ சமூகத்துக்கு வணக்கம்

என்னை இந்த மண்ணில் பெற்றெடுத்த அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என் சிரம் தாழ்த்தி அவர்களின் காலை தொட்டு வணங்கி எனது இந்த புதிய உறவு பாலத்தை தொடங்குகின்றேன். இந்த இனிய நேரத்தில் என் வாழ் நாளில் எப்போதும் துணை நிற்கும் சொந்தங்களையும் அன்பு நண்பர்களையும் இங்கு நினைவு கூறுகிறேன் உழைப்பாளர் தினமும் என் இனிய நண்பனின் பிறந்த நாளான இன்று உங்களை முதன் முதலாய் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் .
இன்னிக்கி இது போதும் "பட்டாச " சீக்கிரமா கொளுத்தலாம்.