செவ்வாய், 31 ஜனவரி, 2012

காண்பதில் மகிழ்ச்சி

வலை நண்பர்களே எப்படி இருக்கீங்க ? மிக பெரிய இடைவெளிக்கு பிறகு உங்களை காண்பதில்  மகிழ்ச்சி

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பொண்ணு பாக்க போறேன் - ஒரு பக்க கதை - 3


வணக்கம், வாங்க வாங்க, என்றழைத்த அந்த நபர் தான் பெண்ணின் அப்பாவாக இருக்க கூடும் என்பதை  எத்தனையோ இடங்களில் பெண் பார்த்த அனுபவம் சொல்லிற்று.    என் அப்பாவும் அம்மாவும் தங்களின் இறுகிய முகத்தை சற்று தளர்த்தி சிறிய புன்னகையை பதில் வணக்கமாய் தெரிவித்தனர்.  படலம் ஆரம்பமாயிற்று, பெண் வீட்டார் தங்களின் குடும்ப பெருமைகளை அள்ளி வீசினர். வழக்கம்போல் என் அப்பாவும் அம்மாவும் தலையை ஆட்டி அதையெல்லாம் கேட்டு வைத்தனர்.  பெண்ணின் அப்பா நேரிடையாக என்னிடம் கேட்டே விட்டார், சொல்லுங்க தம்பி, தரகர் சொன்னார், உங்க கண்டிஷன் என்ன? என்னால முடிஞ்சத செய்யுறேன்.  நான் என் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தேன், அவர்களின் முகம் எந்த விதமான பாவங்களையும் காட்டாமல் இறுகி இருந்தது.  நான் நிதானமாய் ஆரம்பித்தேன், சார், நான் கல்யாணம் பண்ணிக்கிற  பொண்ணு வேலைக்கு போகணும், அது மட்டுமில்லாமே அவள பெத்தவங்களும் அவளோடவே வந்துடனும், எல்லோரும் கூட்டு குடும்பமா இருக்கணும், இது தான் என் கண்டிஷன்.        பெண் வீட்டாரின் முகத்தில் ஏகப்பட்ட குழப்பம், ஒரு சிலர் என்னை பற்றி காரமாகவோ அல்லது கிண்டலாகவோ பேசினார். பிறகு  அவர்களுக்குள் விவாதித்து விட்டு, சரிங்க நாங்க இத பத்தி பேசி  ஒரு முடிவு எடுதாப்பரம் உங்களுக்கு போன் பண்றோம் என்றார் பெண்ணின் உறவினர் ஒருவர்.  என் அம்மாவும் அப்பாவும் எழுந்துகொண்டனர் அதே இறுகிய முகத்தோடு.   

வெள்ளி, 23 ஜூலை, 2010

யார் தெய்வம் - ஒரு பக்க கதை-2


குமரன் காலையிலேயே குளித்துவிட்டு நெற்றியில் பெரியதாக பட்டை இழுத்துவிட்டு கடவுளை கும்பிட பூஜை அறையில் நின்றிருந்தான். கண்களை மூடி, மூச்சை நன்றாக  உள்ளிழுத்து, சீராய் வெளியே விட்டான். உதடுகள் முணுமுணுக்க தொடங்கின.  கடவுளே, நான் என்ன வேண்டினாலும் தரும் உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, நீங்கள் தான் எனக்கு புடிச்ச தெய்வம், நான் எப்ப எது கேட்டாலும் எனக்கு எப்படியாவது கிடைக்க வைக்கீரங்க, அதுக்கு ரொம்ப நன்றி, நான் சைக்கிள் வாங்கனும்னு வேண்டினேன், சைக்கிள் தந்தீங்க, +2 பாஸ் பண்ணதும் இன்ஜினியரிங் சேரணும்னு வேண்டினேன், உடனே எனக்கு இன்ஜினியரிங் சீட் கெடச்சுது, இப்படி கேட்டதெல்லாம் கொடுக்குற கடவுளே இப்பவும் நான் உங்களை ஒண்ணு வேண்டிக்கிறேன், அதையும் தயவு செய்து எனக்கு கொடுங்க என்றவாறு  கண்களை திறந்து கடவுளின் உருவத்தை உற்று நோக்கினான் குமரன். "கடவுளே, என் காலேஜ் நண்பன் சாகுல் அமீது புது பைக் வாங்கி இருக்கான், ரொம்ப நல்லா இருக்கு, எனக்கும் அது போல ஒரு பைக் வேணும், தயவு செஞ்சு பைக் கிடைக்குற மாதிரி பண்ணுங்க"  என்றவாறு கைகளை உயர்த்தி தலை வணங்கி கடவுளை குபிட்டு விட்டு வெளியே  வந்தான் குமரன். அங்கு அவன் அப்பா அவனை ஒரு குறும் புன்னைகையுடன் பார்த்தார். "குமரா இங்க வா, இத புடி" என்றவாறு ஒரு சாவியை கொடுத்தார் குமரனின் அப்பா. "ரொம்ப நாளா பைக் வேணும்னு பொலம்பிகிட்டு இருந்தியே, போய் வாசல்ல பாரு, ஒரு புது பைக் வாசல்ல நிக்குது, ஆபீஸ்ல லோன் போட்டு வாங்கி இருக்கேன்,  இந்தா பணம் போய் ஒரு நல்ல ஹெல்மெட் வாங்கிக்க, வண்டியை எப்பவும் கவனமா ஓட்டனும், என்ன புரிஞ்சுதா" என்றவரின் முகத்தை பார்கிறேன். 
யார் ..........?

செவ்வாய், 22 ஜூன், 2010

கடவுள் என் முன்னே நிற்கிறார்

விரித்த விழி மூடவில்லை,
உள்ளிழுத்த ஆவி வெளிவரவில்லை,
மயிர் கால்கள் குத்திட்டு நிற்க,
'சிலையாய்' நின்றேன்
கடவுள் என் முன்னே நிற்கிறார்.


                        ********


தினமும் வேண்டுவேன் கடவுளை,
கடவுளே இதை கொடு, அதை கொடு,
உடனே கொடு, சீக்கிரம் கொடு,
இத்தனை நாட்களுக்குள் கொடு,
இத்தனை மாதங்களுக்குள் கொடு,
கொடு, கொடு, கொடு.
கடவுள் 'கேட்டார்'
சரி கேட்டதையெல்லாம் தருகிறேன்
அத்துடன் நீ திருப்தி கொள்வாயா?

புதன், 16 ஜூன், 2010

பட்டாசு பத்திக்கிச்சு: நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?

பட்டாசு பத்திக்கிச்சு: நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?

நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?

நண்பர்களே உங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்,
மேலே உங்களின் ஓட்டுகளை இட்டும், கமெண்ட் வழியாகவும் உங்களின் அனுபவங்களை இந்த வலை தலத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?

நம்பலாம் - இனிய அனுபவம்
நம்பகூடாது - கசப்பான அனுபவம்
ஒரு எல்லைவரை நம்பலாம்
நண்பர்களா, எங்கே அவர்கள்?

சனி, 12 ஜூன், 2010

ஒரு பக்க கதைகள் - 1 - "அம்மா நான் பாசாயிட்டேன்"

ஒரு பக்க கதைகள் - 1


"அம்மா நான் பாசாயிட்டேன்"

குமாருக்கு இதய துடிப்பு அதிகரித்துகொண்டே இருந்தது. அவனுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிவருகின்றன.

இது அவனுடைய வாழ்கையின் போக்கையே மாற்றப்போகும் தினம் என்பது தெளிவாக உணர்ந்திருந்தன். அவனுடன் படித்த நண்பர்கள் வசதியில் உயர்ந்தவர்களாகவும், இன்று தோற்றால் மறுபடி பரீட்சை எழுதி வெற்றி பெற பண பலமும், சுற்றத்தார் உதவியும் நிறைந்தவர்கள். குமாருக்கு அப்படி இல்லை. அவன் வீட்டுக்கு ஒரே பையன், அவன் அப்பாவும் அம்மாவும் அந்த சிறிய கிராமத்தில் விவசாய கூலிகளாக வேலை செய்கிறார்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் மகனை படிக்க வைக்க முயற்சித்து பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். அதுவும் பள்ளி கட்டணம், புத்தகம் எல்லாம் இலவசமாக கிடைப்பதால் ஏதும் பிரச்சினை இல்லாமல் இருந்தது.

ஆனால் விதி ஊரை ஒட்டிய நெடுஞ்சாலையில் புதியதாக திறந்திருக்கும் பெட்ரோல் பங்கினால் வந்தது. அந்த பங்கின் முதலாளி குமார் அப்பா வேலை செய்யும் பண்ணையாருடையது. அவர் உரிமையோடு குமாரின் அப்பாவை கூப்பிட்டு "என்னப்பா உன் பையன் பத்தாவது பரீட்சை எழுதி இருக்கானாமே, எப்படி, தேறுவானா மாட்டானா, எப்படி இருந்தாலும் பரவாயில்லை உன் பையனை என்னோட பெட்ரோல் பங்குல கேசியர் வேலைக்கு போடறேன், உடனே அவன வேலையில போய் சேர சொல்லு" என்றார். குமாரின் அப்பாவுக்கோ அவரின் கட்டளையை மீற முடியாத தர்மசங்கடமான நிலை. குமாரின் அம்மாவிடம் இதை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது குமார் வீட்டினுள் நுழைந்தான். "இங்க பாருங்க, அவன படிக்க வைக்க நாம இது வர ஒன்னும் பெரிய செலவு ஒன்னும் பண்ணதில்ல, அவன் படிக்கணும் என்று ஆசை  படறான், அவன் படிச்சு முன்னேறினா நமக்கு தானுங்க பெரும, அதனால அவன் தொடர்ந்து படிக்கட்டும்" என்றார். குமாரின் அப்பாவும் இதற்க்கு ஒத்து கொண்டார் ஒரு நிபந்தனையோடு, பாஸாயிட்டா  தொடர்ந்து படிக்கலாம், ஆனா பெயிலாயிட்டா பெட்ரோல் பங்க் வேலைக்கு போகணும் என்று.   நண்பன் பேப்பரை கொடுத்து பரீட்சை நம்பரை பார்க்க சொன்னான். "அம்மா நான் பாசாயிட்டேன்" "அம்மா நான் பாசாயிட்டேன்"
டேய் குமார், குமார் என்னடா பகல் கனவு, கஸ்டமர் வந்து இருக்காங்க பாரு, போய் பில்லு போடற வழியை பாரு என்றபடி கல்லாவில் உட்கார்ந்தார் பண்ணையார்.