வெள்ளி, 23 ஜூலை, 2010

யார் தெய்வம் - ஒரு பக்க கதை-2


குமரன் காலையிலேயே குளித்துவிட்டு நெற்றியில் பெரியதாக பட்டை இழுத்துவிட்டு கடவுளை கும்பிட பூஜை அறையில் நின்றிருந்தான். கண்களை மூடி, மூச்சை நன்றாக  உள்ளிழுத்து, சீராய் வெளியே விட்டான். உதடுகள் முணுமுணுக்க தொடங்கின.  கடவுளே, நான் என்ன வேண்டினாலும் தரும் உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, நீங்கள் தான் எனக்கு புடிச்ச தெய்வம், நான் எப்ப எது கேட்டாலும் எனக்கு எப்படியாவது கிடைக்க வைக்கீரங்க, அதுக்கு ரொம்ப நன்றி, நான் சைக்கிள் வாங்கனும்னு வேண்டினேன், சைக்கிள் தந்தீங்க, +2 பாஸ் பண்ணதும் இன்ஜினியரிங் சேரணும்னு வேண்டினேன், உடனே எனக்கு இன்ஜினியரிங் சீட் கெடச்சுது, இப்படி கேட்டதெல்லாம் கொடுக்குற கடவுளே இப்பவும் நான் உங்களை ஒண்ணு வேண்டிக்கிறேன், அதையும் தயவு செய்து எனக்கு கொடுங்க என்றவாறு  கண்களை திறந்து கடவுளின் உருவத்தை உற்று நோக்கினான் குமரன். "கடவுளே, என் காலேஜ் நண்பன் சாகுல் அமீது புது பைக் வாங்கி இருக்கான், ரொம்ப நல்லா இருக்கு, எனக்கும் அது போல ஒரு பைக் வேணும், தயவு செஞ்சு பைக் கிடைக்குற மாதிரி பண்ணுங்க"  என்றவாறு கைகளை உயர்த்தி தலை வணங்கி கடவுளை குபிட்டு விட்டு வெளியே  வந்தான் குமரன். அங்கு அவன் அப்பா அவனை ஒரு குறும் புன்னைகையுடன் பார்த்தார். "குமரா இங்க வா, இத புடி" என்றவாறு ஒரு சாவியை கொடுத்தார் குமரனின் அப்பா. "ரொம்ப நாளா பைக் வேணும்னு பொலம்பிகிட்டு இருந்தியே, போய் வாசல்ல பாரு, ஒரு புது பைக் வாசல்ல நிக்குது, ஆபீஸ்ல லோன் போட்டு வாங்கி இருக்கேன்,  இந்தா பணம் போய் ஒரு நல்ல ஹெல்மெட் வாங்கிக்க, வண்டியை எப்பவும் கவனமா ஓட்டனும், என்ன புரிஞ்சுதா" என்றவரின் முகத்தை பார்கிறேன். 
யார் ..........?